இந்தியாவில் முதல் முறை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குரல் அறிவிப்புகள் நிறுத்தம்

இந்தியாவில் முதல் முறை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குரல் அறிவிப்புகள் நிறுத்தம்

1 mins read

சென்னை: சென்னை சென்ட்­ரல் ரயில் நிலை­யத்­தில் இனி 'குரல் அறி­விப்­பு­கள்' இருக்­கா மாட்டா என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்கு மாற்­றாக ரயில் நிலை­யத்­தில் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் மின்­னி­லக்க அறி­விப்­புப் பல­கை­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன.

நாட்­டி­லேயே இத்­த­கைய முயற்சி சென்னை சென்ட்­ரல் ரயில் நிலை­யத்­தில்­தான் முதன் முத­லாக சோதனை அடிப்­ப­டை­யில் செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

நாள்­தோ­றும் 5.3 லட்­சம் பயணி­கள் இந்த ரயில் நிலை­யத்­துக்கு வந்து செல்­கின்­ற­னர். ரயில் புறப்­பாடு, வருகை குறித்து முன்பு குரல் வழி அறி­விப்­பு­கள் இருந்­தன. 200 விரைவு ரயில்­க­ளுக்­கான அறி­விப்­பு­கள் தொடர்ந்து ஒலித்­த­வண்­ணம் இருக்­கும். தற்­போது ரயில் நிலை­யத்­தின் நுழை­வா­யில்­கள் தொடங்கி பல்­வேறு இடங்­களில் மின்­னி­லக்க அறி­விப்­புப் பல­கை­கள் காணப்­ப­டு­கின்­றன.

மேலும், பார்­வை­யற்­ற­வர்­கள் வச­திக்­காக முக்­கிய நுழை­வா­யி­லில் 'பிரெய்லி' முறை­யில் உரு­வாக்­கப்­பட்ட வழி­காட்­டும் வரை­படங்­கள் உள்­ள­தாக ரயில்வே நிர்­வா­கம் அறி­வித்­துள்­ளது. மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்குப் பயன்­படும் வகை­யில் ரயில் நிலைய கண்­ணோட்­டத்தை வழங்­கும் சைகை மொழி வீடி­யோ­வைப் பார்ப்­ப­தற்­கான 'க்யூ.ஆர். கோட்' பல இடங்­களில் ஒட்­டப்­பட்­டுள்­ளன.