சமூக பதற்றத்தை உருவாக்க பாஜக முயற்சி: டிஜிபியிடம் திருமா புகார்

சமூக பதற்றத்தை உருவாக்க பாஜக முயற்சி: டிஜிபியிடம் திருமா புகார்

2 mins read

சென்னை: தமி­ழக பாஜ­க­வி­னர் சமூக பதற்­றத்தை உரு­வாக்கி அதன் மூலம் அர­சி­யல் ஆதா­யம் தேட முயற்சி செய்­வ­தாக தொல்.திரு­மா­வ­ள­வன் சாடி உள்­ளார்.

தமி­ழக காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­திர பாபு­வி­டம் இது தொடர்­பாக அவர் புகார் மனு ஒன்றை அளித்­துள்­ளார்.

இது­கு­றித்து சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், பொது வெளி­யி­லும் பொது மேடை­க­ளி­லும் பாஜ­க­வி­னர் பேசு­வது வன்­மு­றை­யைத் தூண்­டும் வகை­யில் உள்­ள­தா­கக் குறிப்­பிட்டார். மேலும், பாஜ­வி­னர் சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் வன்­முறையைத் தூண்­டும் கருத்­துப்­களை பதி­விட்டு வரு­வ­தாக அவர் சாடினார்.

தமி­ழ­கத்­தில் நில­வும் சட்­டம், ஒழுங்குப் பிரச்­சினை குறித்த சில­த­க­வல்­களை டிஜி­பி­யி­டம் பகிர்ந்து­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்ட திருமா­வ­ள­வன், அண்­மை­யில் சென்­னை­யில் நடந்த ஆர்ப்­பாட்­டம் ஒன்­றில் தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை பேசி­யது சமூக பதற்­றத்தை உரு­வாக்­கும் வகை­யி­லும் வன்­மு­றை­யைத் தூண்­டும் வகை­யி­லும் உள்­ளது என்­றும் தெரி­வித்­தார்.

"ஒரு ராணுவ பணி­யா­ளர், ராணு­வத்­தில் வேலை செய்­யக் கூடி­ய­வர், 'குண்டு வீசு­வோம், துப்­பாக்­கி­யால் சுடு­வோம்' என்­றெல்­லாம் பேசும் அள­வுக்கு தமிழக பாஜக தலை­வர் வெளிப்­படை­யா­கவே ஊக்­கப்­ப­டுத்­து­கிறார். இது சட்­டம், ஒழுங்கைச் சீர்­கு­லைக்க வேண்­டும் என்­கிற சதித்­திட்­டம் என்று தெரிய வரு­கிறது. திமுக அர­சுக்கு நெருக்கடி தரவேண்­டும் சமூக பதற்­றத்தை உரு­வாக்க வேண்­டும் அதன் மூலம் அர­சி­யல் ஆதா­யம் தேட வேண்­டும் என்­ப­தில் பாஜக குறி­வைத்து வேலை செய்­கிறது," என்­றார் திரு­மா­வ­ள­வன்.

வட மாநி­லங்­களில் வெறுப்பு பேச்சு, பரப்­பு­ரை­கள் மூலம் பாஜக வன்­மு­றை­க­ளைத் தூண்டி ஆதாயம் தேடி வரு­வ­தா­கக் குற்றம்­சாட்­டிய அவர், அதே உத்தி க­ளைத் தமி­ழ­கத்­தி­லும் நடை­முறைப்­ப­டுத்த பாஜ­க­வி­னர் திட்­ட­மி­டு­வ­தா­கக் கூறி­னார். பாஜ­க­வி­ன­ரின் இத்­த­கைய சதி முயற்சி­யைச் சுட்­டிக்­காட்டி அவர்­கள் மீது வழக்­குப் பதிய வேண்­டும் என்­றும் உட­னடி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் காவல்­துறை தலை­வ­ரி­டம் வலி­யு­றுத்­தி­ய­தாக விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சித் தலை­வர் திரு­மா­வ­ள­வன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.