சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட குடும்பத்துக்கு வலைவீச்சு

சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட குடும்பத்துக்கு வலைவீச்சு

1 mins read
61d6a82a-0f00-48e4-8543-d1358df65a0a
-

ஓடும் பேருந்­தில் கூட்ட நெரி­ச­லைப் பயன்­ப­டுத்தி சங்­க­லிப் பறிப்­பில் ஈடு­பட்ட இளம் பெண்ணை கோவை காவல்­துறை கைது செய்­தது.

விசா­ர­ணை­யின்­போது பொது மக்­கள் அணிந்­தி­ருக்­கும் தங்­கச் சங்­கி­லி­க­ளைப் பறிப்­ப­தையே குடும்­பத் தொழி­லாகச் செய்து வருவதாக கைதான 32 வய­துப் பெண் சத்யா தெரி­வித்­தார்.

திண்­டுக்­கல் மாவட்­டம் பழ­னி­யைச் சேர்ந்­த­வர் வடி­வேலு. இவர் தனது மனைவி, குடும்­பத்­தா­ரு­டன் கோவில் திரு­விழா, தேரோட்ட நிகழ்ச்­சி­கள் நடக்­கும் இடங்­களுக்கு முன்­கூட்­டியே சென்­று­விடு­வார். பக்­தர்­கள் போன்ற தோற்­றத்­தில் வலம்வந்து, பொது­மக்­கள் அணிந்­துள்ள நகை­களைப் பறிப்­ப­து­தான் அவ­ரது குடும்­பத்­தா­ரின் வழக்­கம்.

இந்­தச் சங்­கி­லிப் பறிப்பு கும்­பலில் அவ­ரது உற­வுப் பெண்­கள் மூவர் இடம்­பெற்­றுள்­ள­னர். அண்மை­யில் இக்கும்­பல் கோவைக்கு வந்து கைவ­ரிசை காட்­டத் தொடங்­கி­யது. பேருந்­தில் சங்­கி­லிப் பறிப்­பில் ஈடு­பட்­ட­போது எதிர்­பா­ராத வித­மாக சிக்­கிக்­கொண்­டார் சத்யா. அவ­ரு­டன் பேருந்­தில் உட­னி­ருந்­த­போ­தும், சத்யா பிடி­பட்­ட­தும் சத்­த­மின்றி நழு­வி­விட்­டார் வடி­வேலு.

இவ­ரது குடும்­பம் ஏரா­ள­மான சங்­கி­லிப் பறிப்­புச் சம்­பவங்­களை நிகழ்த்தி, அதன் மூலம் லட்­சக் கணக்­கில் பணம் சேர்த்­துள்­ள­னர். அதை வைத்து ஆடம்­ப­ர­மாக வாழ்ந்து வரு­வ­தாக சத்யா வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார். அவ­ரது கண­வ­ருக்­கும் உற­வுப் பெண்களுக்­கும் காவல்­துறை வலைவீசி­யுள்­ளது.