தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யானைகள் வாங்க அனுமதி இல்லை: நீதிமன்றம் உத்தரவு

1 mins read

மதுரை: இனி கோவில்­களில் வளர்க்­கப்­ப­டு­வ­தற்கு என யானை­கள் வாங்­கக்­கூ­டாது என உயர் நீதி­மன்ற மதுரை கிளை உத்­த­ர­விட்­டுள்­ளது.

யானை­கள் பரா­ம­ரிப்பு தொடர்­பான வழக்கு ஒன்றை விசா­ரித்­த­போது, யானை­கள் மீதான தாக்­கு­த­லைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­யாக உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டு­வ­தாக உயர் நீதி­மன்ற நீதி­பதி குறிப்­பிட்­டார்.

கோவில்­களில் வளர்க்­கப்­படும் யானை­கள் அரசு மறு­வாழ்வு முகாம்­க­ளுக்கு அனுப்­பப்­பட வேண்­டுமா என்­பது குறித்து முடிவு செய்ய இதுவே சரி­யான நேரம் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், பல கோவில்­களில் முற்­றி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நிலை­யில் யானை­கள் வைக்­கப்­பட்டு உள்­ள­தாக கவலை தெரி­வித்­தார்.

"பல யானை­கள் 24 மணி நேர­மும் சங்­கி­லி­யால் பிணைக்­கப்­பட்­டுள்­ளன. மது­போ­தை­யில் உள்ள பாகன்­க­ளால் யானை­கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­கின்­றன.

"சித்­திரவதை தாங்க முடி­யாமல், யானை­கள் சில நேரங்­களில் கோப­ம­டைந்து வன்­முறை­யில் ஈடு­ப­டு­கின்­றன. எனவே அனைத்துக் கோவில்­கள், தனி­யார் யானை­களை தமி­ழக சுற்­றுச்­சூ­ழல், வனத்­துறை செய­லர் ஆய்வு செய்யவேண்­டும்," என நீதி­பதி மேலும் தெரி­வித்­துள்­ளார்.