உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை: மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் முயற்சி

2 mins read
4dcd2943-f7aa-4d12-b9d7-951bfa6b8e5d
-

திருச்சி: தமி­ழக அர­சுப் பள்­ளி­களில் உயர்­தர அறி­வுத்­தி­றன் வகுப்­பறை (ஸ்மார்ட் க்ளாஸ்) என்ற புதிய முயற்சி செயல்படுத் தப்படுகிறது.

இதன் மூலம் மாண­வர்­க­ளின் கற்­றல் திறன் மேம்­ப­டு­வ­தாகத் துறை­சார் நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சென்னை சேப்­பாக்­கம் பகு­தி­யில் உள்ள ஏழு பள்­ளி­களில், 28 வகுப்­ப­றை­கள் உயர்­தர அறி­வுத்­தி­றன் வகுப்­ப­றை­க­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளன.

இதற்­காக ஒவ்­வொரு வகுப்­பறைக்­கும் தலா இரண்டு லட்­சம் ரூபாய் மதிப்­பில் உரிய வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இத்­திட்­டத்­துக்­காக மொத்­தம் ரூ.56 லட்­சம் செல­வி­டப்­பட்­டுள்­ளது.

இந்த வகுப்­ப­றை­களில் நவீன தொழில்­நுட்­பத்­து­டன் அமைக்­கப்­பட்­டுள்ள திரைப்­ப­லகை மூலம் (மின்­னி­லக்­கப் பலகை) கற்­றல் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படு­கின்­றன என்­றும் இத­னால் கற்­றல் திறன் மேம்­படும் என்­றும் தமி­ழக அரசு வெளி­யிட்ட செய்திக்­கு­றிப்பு தெரி­விக்­கிறது.

இதற்­கி­டையே, தனது தொகு­திக்கு உட்­பட்ட பள்­ளி­களில் அறி­வுத்­தி­றன் வகுப்­ப­றை­கள் அமைக்­கப்­பட்டு அவை வெற்­றி­க­ர­மாக இயங்­கு­வதை சேப்­பாக்­கம் தொகுதி எம்­எல்­ஏ­வான உத­ய­நிதி ஸ்டா­லின் பார்­வை­யிட்டு அதி­காரி­க­ளுக்கு சில ஆலோ­ச­னை­களை வழங்­கி­னார்.

அசத்­தும் பெரம்­ப­லூர் பள்ளி

இந்நிலையில், பெரம்­ப­லூர் மாவட்­டம், பாடா­லூர் அருகே உள்ள செட்­டி­கு­ளம் கிரா­மத்­தில் இயங்கி வரும் அரசுப் பள்ளி ஒன்று, தனி­யார் பள்­ளி­க­ளுக்குச் சவால் விடும் வகை­யில் செயல்­பட்டு வரு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­தப் பள்­ளி­யில் தற்­போது 458 மாண­வர்­கள் படித்து வரு­கின்­ற­னர். 12 ஆசி­ரி­யர்­கள் பணி­யாற்­று­கின்­ற­னர்.

இங்கு அனைத்து அடிப்­படை வச­தி­களும் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் சுத்­த­மான குடி­நீர், சுகா­தா­ர­மான சத்­து­ணவு, வகுப்­ப­றை­களில் மின்­வி­சிறி, வகுப்­ப­றை­கள் முழு­வ­தும் அழ­கிய கல்வி சார்ந்த வண்ண ஓவி­யங்­கள், அறி­வுத்­தி­றன் வகுப்­பு­கள் ஆகி­யவை உள்­ளன என்­றும் ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

யோகா வகுப்­பு­கள், ஆங்­கில மொழித்­தி­றன் பயிற்சி, கணிதப் பயிற்சி, கையெ­ழுத்துப் பயிற்சி ஆகி­ய­வற்­று­டன் நாள்­தோ­றும் பல்­வேறு வித­மான தேர்­வு­களும் நடத்­தப்­ப­டு­வ­தால் மாண­வர்­களின் தன்­னம்­பிக்கை அதி­க­ரிப்­ப­தாகப் பெற்­றோர் கூறு­கின்­ற­னர். இத்­த­கைய செயல்­பா­டு­கள் கார­ண­மாக அப்­பள்­ளி­யில் ஆண்­டு­தோ­றும் மாண­வர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள அர­சுப் பள்­ளி­களில் அறி­வுத்­தி­றன் வகுப்­பு­களை நடத்­து­வ­தற்கு கல்­வித்­துறை உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.