சென்னை: பாஜக பிரமுகர்கள் பலர் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் திலீப் கண்ணன், அம்மு என்கிற ஜோதி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நேற்று அதிமுகவில் இணைந்தனர்.
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமாரைத் தொடர்ந்து, அதன் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணன் நேற்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
சிடிஆர் நிர்மல்குமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைமீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்த நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணனும் அண்ணாமலைமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியிலிருந்து விலகி நேற்று அதிமுகவில் இணைந்தார்.

