திருவாரூர் மாவட்டம், அம்மையப்பனில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு நாள்களுக்குத் தொடரும் பாரம்பரிய உணவுத் திருவிழா நேற்று தொடங்கியது. இவ்விழாவில் மூலிகையால் செய்யப்பட்ட துவையல், தொக்கு என 300 வகையான பாரம்பரிய உணவு வகைகளை மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக, பாரம்பரிய அரிசி வகையில் செய்யப்பட்ட உணவு வகைகள், சிறு தானியங்களில் செய்யப்பட்ட தோசை, இட்லி வகைகள், தூதுவளை உள்ளிட்ட பல்வேறு மூலிகையில் செய்யப்பட்ட துவையல், தொக்கு என பல்வேறு உணவு வகைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பிடித்திருந்தன.
படம்: தமிழக ஊடகம்