பள்ளியில் கலவரம் செய்த மாணவர்கள்

1 mins read
e453a8a4-967f-47f3-ad7c-ae971725518e
-

தரு­ம­புரி: மாண­வர்­கள் பள்ளி வகுப்­ப­றை­யில் உள்ள பெஞ்ச், டெஸ்க், ஸ்விட்ச், மின்­வி­சிறி போன்ற தள­வாடப் பொருள்­களை அடித்து உடைத்­துள்­ள­னர்.

தரு­ம­புரி மாவட்­டம், மாரண்­ட­அள்ளி அருகே அ.மல்­லா­பு­ரம் அரசு மேல்­நி­லைப்­பள்­ளி­யில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 700க்கும் மேற்­பட்ட மாணவ, மாண­வி­கள் பயின்று வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில் 11 மற்­றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாண­வி­கள் செய்­முறை தேர்வு முடிந்­தது.

தேர்வு முடிந்­த­தைக் கொண்­டா­டும் விதத்­தில் அங்­கி­ருந்த மாண­வர்­கள் வகுப்­ப­றை­யில் இருந்த உட்­கா­ரும் பெஞ்ச், மின்­வி­சிறி போன்ற தள­வா­டங்­களை உடைக்­கத் தொடங்கி­யுள்­ள­னர்.

சத்­தம் கேட்டு அங்கு வந்த தலை­மை­யா­சி­ரி­யர் மாண­வர்­க­ளைக் கண்­டித்­தார். அத்­து­டன் மாண­வர்­க­ளின் பெற்­றோரை பள்­ளிக்கு வர­வ­ழைத்து வகுப்­ப­றை­யைக் காட்­டி­னார்.

வகுப்­ப­றை­யில் உடைந்த பொருள்­க­ளைப் பார்த்த பெற்­றோர் அதிர்ச்சி அடைந்­த­னர். தங்­கள் பிள்­ளை­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டாம். அது அவர்­க­ளின் வாழ்க்­கை­யைப் பாதிக்­கும். இனி இது­போல் நடக்­கா­மல் நாங்­கள் கண்­டிக்­கி­றோம் என்று உறு­தி­மொழி கூறி தங்­கள் பிள்­ளை­களைக் கண்­டித்து அழைத்­துச் சென்­ற­னர்.

இந்­நி­லை­யில் வகுப்­ப­றை­யில் இருந்த ஒரு மாண­வன் மற்­ற­வர்­கள் உடைக்­கும்­போது எடுத்த காணொ­ளியை வலைத்­

த­ளத்­தில் பகிர்ந்­துள்­ளார். அத­னைத்­தொ­டர்ந்து விளக்­கம் அளித்த தலை­மை­யா­சி­ரி­யர், "மாண­வர்­க­ளின் பெற்­றோர்­களை பள்­ளிக்கு வர­வ­ழைத்து எச்­ச­ரித்து எழுதி வாங்­கி­யுள்­ளோம். மேலும் இது சம்­பந்­த­மாக முதன்மை கல்வி அதி­கா­ரிக்கு தக­வல் தெரி­வித்து உள்­ளோம். அவர் இந்த சம்­ப­வத்தை விசா­ரித்து மாண­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுப்­பார்," என்று பதி­விட்­டுள்­ளார்.