புதுடெல்லி: இந்தியாவின் ஆன்மீகத் தலமான ராமேஸ்வரத்தில் உள்ள அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களிலும் கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் வகையில், நான்கு மிதக்கும் கப்பல் இறங்குத் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளது.
இந்த மிதக்கும் இறங்குத் தளங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் நவீனமயமாகவும் நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் இருக்கும்.
"இதன்மூலம் சுற்றுப்பயணிகள் தடையின்றியும் பாதுகாப்பாகவும் போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்,'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரி வித்துள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், "மிதக்கும் கப்பல் இறங்குத் தளங்கள் இந்தியாவுக்கு மிகவும் அவசியமானது. கர்நாட கத்தில் 11 இறங்குத் தளங்களை அமைக்க அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்வழி உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், அந்தந்த பகுதிவாழ் மக்களின் வர்த்தகமும் அதிகரிக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

