68 தங்கக் கட்டிகளுடன் மூவர் பிடிபட்டனர்

68 தங்கக் கட்டிகளுடன் மூவர் பிடிபட்டனர்

1 mins read
d8a7325c-db93-41cc-b65d-e79038633d7c
-

சென்னை: சிங்­கப்­பூர், மலே­சியா ஆகிய நாடு­களில் இருந்து கடத்தி வரப்­பட்ட மூன்­றரை கோடி ரூபாய் மதிப்­புள்ள தங்­கக் கட்­டி­கள், நகை­களைச் சுங்­கத் துறை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக மூவர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரில் இருந்து சென்னை வந்த விமா­னத்­தில் பய­ணம் வந்த இரண்டு ஆட­வர்­க­ளின் உடை­மை­களைச் சுங்­கத்­துறை அதி­காரி­கள் சோதித்­த­போது, அவர்களது கைப்­பை­யில் ரக­சிய அறை­கள் வைத்து அதில் தலா 100 கிராம் எடை கொண்ட 68 தங்­கக் கட்­டி­களை மறைத்து கடத்தி வந்­த­தைக் கண்­டு­பி­டித்­த­னர். இதை­ய­டுத்து இரு­வ­ரி­டம் இருந்­தும் ரூ.3 கோடியே 32 லட்­சம் மதிப்­புள்ள 6 கிலோ 800 கிராம் எடை கொண்ட 68 தங்கக் கட்­டி­களை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

அதே­போல், மலே­சி­யா­வில் இருந்து சென்னை வந்த மலே­சி­யப் பெண்ணின் உடைமைகளைச் சோதித்­த­போது, 740 கிராம் எடை கொண்ட தங்க நகை­களை உள்­ளா­டைக்­குள் மறைத்து கடத்தி வந்­ததைக் கண்­டு­பி­டித்­த­னர். மூவரும் கைதாகினர்.

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த தலா 100 கிராம் எடை கொண்ட 68 தங்­கக் கட்­டி­களை சுங்க அதிகாரி கள் பறிமுதல் செய்தனர்.

படம்: ஊடகம்