காணாமல்போன குளம், கால்வாய்களை மீட்டுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

1 mins read
300e4387-781c-4861-99c0-44e80eefb3f6
-

தென்­காசி: தென்­கா­சி­யில் உள்ள மங்­க­ளா­பு­ரம் கிரா­மத்­தைச் சேர்ந்த மக்­கள், தங்­க­ளது விவ­சாய நிலங் களுக்குப் பாசன வசதி அளிக்­கும் குளத்­தை­யும் கால்­வா­யை­யும் காண­வில்லை என அங்­குள்ள சுற்­று­வட்­டா­ரப் பகு­தி­களில் சுவ­ரொட்டி ஒட்­டி­யுள்­ள­னர்.

"எங்­க­ளது முக்­கிய வாழ்வா தார­மாக இருந்து வரும் விவ­சாய நிலங்­க­ளுக்­குப் பாசன வசதி அளிக்­கும் குளம், கால்­வாய்­களைக் காண­வில்லை," என்று சுவ­ரொட்டியில் குறிப்­பிட்­டுள்ள அவர்­கள், அவற்றை மீட்­டுத் தர அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என­வும் கோரி­யுள்­ள­னர்.

தென்­காசி மாவட்­டம், கடை­ய­நல்­லூர் அருகே உள்ள மங்­க­ளா­பு­ரம் கிராம மக்­க­ளின் முக்­கி­யத் தொழி­லாக விவ­சா­யம் இருந்து வரு­கிறது. அப்­ப­கு­தி­யில் 600 ஏக்­க­ருக்­கும் மேலான விளை­நிலங்­களில் விவ­சாயம் நடந்து வருகிறது.

இந்நிலங்­க­ளுக்கு பன்­னீர் பெரி­ய­கு­ளம் வழி­யாக பாசன வசதி கிடைத்து வரும் நிலை­யில், தற்­போது இந்­தக் குளத்­தைக் காண­வில்லை என விவ­சா­யி­கள் புகார் கூறியுள்ளனர்.

"பன்­னீர் பெரி­ய­கு­ள­மா­னது ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­தால் விவ­சா­யி­கள் பணி­களை மேற்­கொள்ள முடி­யாமல் உள்ளனர். அத்­து­டன், குளத்­தில் இருந்து விவ­சாய நிலத்­திற்கு தண்­ணீர் செல்­லக்­கூ­டிய கால்­வா­யும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால், வருங்­கா­லங்­களில் விவ­சா­யப் பணி­க­ளைத் தொடர முடி­யாத சூழல் நில­வு­கிறது. இது­கு­றித்து மாவட்ட நிர்­வா­கத் திடம் பல­முறை புகார் அளித்­தும் பலனில்லை. எனவே, தங்­க­ளது வாழ்­வா­தா­ர­மான விவ­சா­யப் பணி­களை மேற்­கொள்ள ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்­டுள்ள குளத்தை மீட்­டுத்தர தமி­ழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்­டும் என அப்­ப­குதி விவ­சா­யி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.