'அவருக்கு பாட்ஷாபோல் மற்றொரு முகமிருக்கு'

2 mins read
4e3cd862-fd55-4534-b451-175057f258ed
-

சென்னை: இந்து சமய அற­நிலை யத்­துறை அமைச்­சர் சேகர் பாபுக்கு 'பாட்ஷா' போல் இன்­னொரு முகம் உள்­ள­தாக நடி­கர் ரஜி­னி­காந்த் பெரு­மி­தம் தெரிவித் துள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெற்று வரும் 'எங்­கள் முதல்­வர் எங்­கள் பெருமை' என்ற வர­லாற்­றுப் புகைப்­ப­டக் கண்­காட்­சியை ரஜினி­காந்த் நேற்று நேரில் பார்வை­யிட்­டார். அவ­ரு­டன் அமைச்­சர் சேகர் பாபு­வும் நடி­கர் யோகி பாபு­வும் உட­னி­ருந்­த­னர்.

முதல்­வர் மு.க.ஸ்டா­லின் இம்மாதம் 1ஆம் தேதியன்று தன் 70வது பிறந்­த­நா­ளைக் கொண் டாடிய நிலை­யில், அவர் கடந்து வந்த பாதை குறித்து கண்­காட்சி யில் திமுகவினர் சித்­தி­ரித்­தி­ருந்­தனர்.

அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்த புகைப்­ப­டங்­க­ளோடு தானும் மு.க. ஸ்டா­லி­னும் இணைந்து எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­ட­மும் இருந்த தைக் கண்டு ரஜி­னி­காந்த் நெகிழ்ச்சி அடைந்­தார்.

அதன்­பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "அமைச்­சர் சேகர் பாபு ரொம்ப அன்­பா­ன­வர், விசு­வா­ச­மா­ன­வர். அவ­ருக்கு பாட்ஷா மாதிரி இன்­னொரு முகம் உள்­ளது. கண்காட்சிக்குச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.

"முதல்­வர் ஸ்டா­லின் தன் 54 ஆண்­டு­கால அர­சி­யல் பய­ணத்­தில், கட்­சிக்­காக உழைத்து படிப்­படி­யாகப் பல பத­வி­களை வகித்து இன்றைக்கு முதல்­வ­ராக இருக்­கி­றார் என்­றால் அது மக்­கள் அவ­ரது உழைப்­புக்கு கொடுத்த அங்­கீ­கா­ரம்," எனப் புகழ்ந்­தார்.

நடி­க­ர் கமல்­ஹா­சன் பிப்­ர­வரி 28ல் திறந்­து­வைத்த கண்காட்சி இன்று­டன் நிறை­வுபெறுகிறது.

புகைப்படக் கண்காட்சியை ரஜினிக்கு காண்பிக்கிறார் அமைச்சர் சேகர் பாபு (இடது). மு.க.ஸ்டா லினின் சிறு வயது படம், கருணாநிதி யுடன் இருந்த தருணங்கள் என பல அரிய புகைப்படங்கள் கண்காட்சியில் இருந்தன.

படம்: ஊடகம்