அமராவதி: தனது வெங்காயத் துக்கு உரிய விலை கிடைக்காத வேதனையில், விவசாயி ஒருவர் தனது பயிர்களை ஆடுகளுக்கு உணவாக்கி மேயவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள கய்ரவடி கிராமத்தைச் சேர்ந்த பாலு (படம்) என்ற விவசாயி, தனது ஐந்து ஏக்கர் விளைநிலத்தில் வெங்காயத்தைப் பயிரிட்டு இருந்தார்.
விளைச்சல் அமோகமாக இருந்தாலும், தற்போது ஒரு கிலோ வெங்காயம் ஐந்து ரூபாய்க்கு மட்டுமே விற்பனை யாவதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த பாலு, வெங்காயத்தை அறுவடை செய்து, பழுது நீக்கி, சுத்தம் செய்து சந்தையில் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்வது கட்டுப்படியாகாது என்பதால் அவற்றை ஆடுகளை மேய விட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.
"மூன்று லட்ச ரூபாய் வரை செலவு செய்து வெங்காயத்தை பயிரிட்டு என்ன பயன்? சந்தைக்குக் கொண்டுசென்று விற்பதால் மேலும் இழப்பே ஏற்படும். இத னால் மன உளைச்சல்தான் மிஞ்சும். எனவேதான் இம்முடிவை எடுத்தேன்," என்று கூறியுள்ளார்.