விமானக் கழிவறையில் புகைபிடித்தவர் மீது வழக்கு

விமானக் கழிவறையில் புகைபிடித்தவர் மீது வழக்கு

1 mins read
ba6f3557-e8f9-477f-bd06-4255909333e3
ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் புகைபிடித்த பயணிமீது மும்பை சஹார் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகி உள்ளது. படம்: பிக்ஸாபே -

மும்பை: ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் புகைபிடித்த பயணிமீது மும்பை சஹார் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகி உள்ளது. கடந்த 10ஆம் தேதி லண்டனிலிருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானக் கழிவறையில் அமெரிக்கா வைச் சேர்ந்த ரமா காந்த், 37, தடையை மீறி புகை பிடித்ததாகவும் மதுபோதை யுடன் விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதாகவும் சக பயணி களிடம் தகராறு செய்ததாகவும் விமானப் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.