அலுவலகத்திற்குள் காளை மாட்டுடன் நுழைந்த விவசாயி

அலுவலகத்திற்குள் காளை மாட்டுடன் நுழைந்த விவசாயி

1 mins read
6fc4772f-a8fb-43ab-8ced-0a9a44f0d8ee
-

பெங்­க­ளூரு: லஞ்­சம் கேட்ட அதி­கா­ரி­க­ளைத் தனது காளை மாட்­டு­டன் சென்று எல்­லப்பா என்ற விவ­சாயி காணச் சென்ற தால் அதி­கா­ரி­கள் அதிர்ந்தனர். இச்­சம்­ப­வம் தொடர்­பில் ஐந்து அதி­கா­ரி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அரசு நிர்­வா­கம் உறுதி அளித்­துள்­ளது.

கர்­நா­டகா மாநி­லம், சவ­னரு மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர் விவ­சாயி எல்­லப்பா ரனோஜி. இவர் தனது நிலத்­திற்­கான ஆவ­ணங்­களில் திருத்­தம் செய்­யக் கோரி நக­ராட்சி அலு­வ­கத்தை நீண்ட நாளாக அணு­கி­வந்­துள்­ளார்.

ஆனால், நக­ராட்சி அதி காரி­களோ வேலை நடப்­ப­தற்கு ரூ.25,000 லஞ்­சம் வழங்க வேண்­டும் எனக் கேட்­டுள்­ள­னர்.

இதை­ய­டுத்து எல்­லப்­பா­வும் படாத பாடு­பட்டு பணத்­தைத் திரட்டி ரூ.25,000 தந்­துள்­ளார்.

அதன்­பின்­ன­ரும் வேலையை முடித்­துத் தரா­மல் கூடு­த­லாக ரூ.25,000 தரக் கோரி வேலை யைச் செய்­து­கொ­டுக்­கா­மல் இழுத்­த­டித்து உள்­ள­னர்.

இத­னால் வெறுப்­ப­டைந்த எல்­லப்பா, அதி­கா­ரி­கள் மிர­ளும் வித­மாக தன் காளை மாட்டு டன் நக­ராட்சி அலு­வ­ல­கத்­திற் குள் நுழைந்­தார்.

"என்­னி­டம் பணம் எது­வும் இல்லை, இந்த காளை மாட்டை வைத்­துக்­கொண்டு காரி­யத்தை முடித்­துத் தாருங்­கள்," என்­றார்.

இந்­தக் காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­யதை அடுத்து காங்­கி­ரஸ் உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் பாஜக அர­சுக்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன.

அதிகாரி களை மிரள வைக்கும் விதத்தில் தன் காளை மாட்டுடன் நகராட்சி அலுவல கத்திற்குள் நுழைந்த விவசாயி.

படம்: ஊடகம்