வடமாநில இளையர்களைத் தாக்கிய நால்வர் கைது

வடமாநில இளையர்களைத் தாக்கிய நால்வர் கைது

1 mins read
44fec7f2-a033-4881-9e66-119d05002cc7
வடமாநிலங்களைச் சேர்ந்த இளையர்கள் சிலர் கோவையில் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். படம்: பிக்ஸாபே -

கோவை: வடமாநிலங்களைச் சேர்ந்த இளையர்கள் சிலர் கோவையில் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

அங்குள்ள நகைப்பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வரும் 33 வயதான கவுதம் சியாமல் உள்ளிட்ட மூன்று பேர் இடையர் தெருவில் தனி வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு மூவரும் அப்பகுதியில் உள்ள கோவில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது, உள்ளூர் இளையர்கள் நான்கு பேர் மது போதையில் அங்கு வந்துள்ளனர்.

பின்னர் கவுதம் சியாமல், அவரது நண்பர்கள் குறித்து அவதூறாகப் பேசியதுடன், தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, அங்கிருந்து கிளம்பிச் சென்ற நால்வரும் காந்தி பூங்கா அருகே பானிபூரி விற்றுக்கொண்டி ருந்த மேலும் இரு வடமாநிலத் தொழிலாளர் களைத் தாக்கியதாகத் தெரிகிறது. தாக்குதலுக்கு ஆளான ஐந்து பேரும் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த நான்கு இளையர்கள் கைதாகி உள்ளனர்.