கீழடி அகழ் வைப்பகம்; குவியும் மாணவர்கள்

கீழடி அகழ் வைப்பகம்; குவியும் மாணவர்கள்

1 mins read

சிவ­கங்கை: கீழடி அகழ் வைப்­ப­கத்­திற்கு நாள்­தோ­றும் ஆயி­ரக்­கணக்­கா­னோர் வருகை தரு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். குறிப்­பாக மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக அவர்­கள் கூறி­யுள்­ள­னர்.

தமி­ழி­னத்­தின் தொன்­மையை விவ­ரிக்­கும் சான்­று­க­ளாக கீழ­டி­யில் நடத்­தப்­பட்ட அக­ழாய்­வின்­போது ஏரா­ள­மான தொல்­பொ­ருள்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. அவற்றுள் 12,000 பொருள்­கள் அகழ் வைப்­ப­கத்­தில் காட்­சிப்­படுத்­தப்­பட்­டுள்­ளன. கடந்த 5ஆம் தேதி முதல் அகழ் வைப்­ப­கத்தைப் பார்­வை­யிட பொது­மக்­கள் அனு­மதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து ஏரா­ள­மா­னோர் அகழ் வைப்­ப­கத்­திற்கு வருகை தரு­கின்­ற­னர். இவர்­களில் வெளி­நாட்­டுச் சுற்­றுலாப் பய­ணி­களும் அடங்­கு­வர். மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது மகிழ்ச்சி அளிக்­கிறது.

"இத­னால் கீழடி கிரா­மம் சுற்று­லாத் தல­மாக மாறி­யுள்­ளது. காட்­சி­ப்படுத்தப்பட்ட தொல் பொருள்­களை நாள்­தோ­றும் காலை 9 முதல் மாலை 7 மணி வரை அனை­வரும் வியப்­பு­டன் பார்த்­துச் செல்­கின்­ற­னர்.

"சனி, ஞாயி­று­களில் சுமார் மூவா­யி­ரம் பேர் வரு­கின்­ற­னர். தற்­போது அனு­மதி இல­வ­சம். விரை­வில் கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­ட­லாம்," என்று அதி­கா­ரி­கள் கூறி­ய­தாக ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.