சென்னை: மருமகள் மீது அமிலம் ஊற்றி கொல்ல முயன்ற மாமியார் கைதானார்.
விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் ஆண்டாள் (55 வயது). இவரது மகன் அவிநாசியில் வேலை பார்த்து வருகிறார். மருமகள் கிருத்திகாவுடன் தங்கியுள்ள ஆண்டாளுக்கு மருமகளின் நடத்தை மீது சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கிருத்திகா மீது கழிவறையைக் கழுவ உதவும் அமிலத்தை எடுத்து வந்து ஊற்றினார் ஆண்டாள். மேலும், கொசு விரட்டப் பயன்படும் திரவத்தையும் மருமகள் வாயில் ஊற்றியுள்ளார்.
கிருத்திகாவின் அலறல் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அமிலம் பட்டதால் கிருத்திகா வலது கண் பார்வையை இழந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. ஆண்டாள் கைதாகி உள்ளார்.

