குறவன், குறத்தி நடனத்துக்கு தடை விதித்தது தமிழக அரசு

குறவன், குறத்தி நடனத்துக்கு தடை விதித்தது தமிழக அரசு

1 mins read

சென்னை: பல்­வேறு தரப்­பி­ன­ரும் புகார்­களை அடுக்­கி­யதை அடுத்து, தமி­ழ­கத்­தில் கோவில் நிகழ்ச்­சி­களில் குற­வன் குறத்தி ஆட்­டத்­திற்குத் தடை விதித்­துள்ளது அரசு. இதற்­கான அரசாணை­யும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் உள்ள கோவில்­களில் திரு­வி­ழாக்­கள் கொண்­டா­டப்­படும்­போது குற­வன், குறத்தி நட­னம் இடம்­பெ­று­வது வழக்­க­மாக உள்­ளது.

எனி­னும், அண்­மைக்­கா­ல­மாக குற­வன், குறத்தி நட­னம் என்ற பெய­ரில் சில தரப்­பி­னர் ஆபாச நட­னத்­துக்கு ஏற்­பாடு செய்­வ­தா­கப் பர­வ­லா­கப் புகார்­கள் எழுந்­தன.

கவர்ச்­சி­யான உடை­ய­ணிந்து, ஆபாச நடன அசை­வு­க­ளு­டன் அத்­த­கைய நட­னங்­கள் அரங்­கே­றின. பல்­வேறு தரப்­பி­ன­ரும் கண்­ட­னம் தெரி­வித்­த­தால் பல கோவில்­களில் குற­வன், குறத்தி நட­னம் ரத்து செய்­யப்­பட்­டது.

இந்­நி­லை­யில் தமி­ழக அர­சும் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

ஆபா­ச­மாக இருப்­ப­தா­லும் ஒரு குறிப்­பிட்ட சமூ­கத்­தி­னரை அவ­ம­திக்­கும் வகை­யில் இருப்­ப­தா­கப் புகார்­கள் வந்­துள்­ள­தா­லும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டுள்­ளது என தமி­ழக அரசு விளக்­கம் அளித்­துள்­ளது.