மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு கடிதம்

மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு கடிதம்

1 mins read

சென்னை: இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டுள்ள தமி­ழக மீன­வர்­கள் 16 பேரை விரை­வாக விடு­விக்க மத்­திய வெளி­யு­ற­வுத்­துறை நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என முதல்­வர் ஸ்டா­லின் வலி­யு­றுத்தி உ ள்ளார்.

இது தொடர்­பாக பிர­த­மர் மோடிக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில், அடிக்­கடி நிக­ழும் கைது நடவடிக்கை உள்­ளிட்ட சம்­ப­வங்­கள் தமி­ழகத்தின் ஏழை மீன­வர்­க­ளின் வாழ்­வா­தாரத்தை சிதைத்து அவர்­க­ளின் மன­தில் அச்ச உணர்வை உரு­வாக்­கு­வ­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தற்­போ­தைய நில­வ­ரப்­படி, தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின் 102 மீன்­பி­டிப் பட­கு­கள் இலங்கை வசம் உள்­ளன. இலங்­கை­யால் விடு­விக்­கப்­பட்ட 6 மீன்­பி­டிப் பட­கு­கள் இன்­னும் இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை.

"இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரால் சிறை­பி­டிக்­கப்­பட்ட 16 மீன­வர்­க­ளை­யும், 102 மீன்­பிடிப் பட­கு­க­ளை­யும் விரை­வில் விடு­வித்­திட தேவை­யான தூத­ரக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும்," என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்­வர் மு.க.ஸ்டாலின் தமது கடிதத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.