தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலிடம்: முதல்வர் விருப்பம்

தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலிடம்: முதல்வர் விருப்பம்

1 mins read
ba3e9d8a-c060-43ea-8443-92179b1a3811
-

'இளைய தலைமுறை தகவல் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்'

சென்னை: தக­வல் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி தமி­ழ­கத்­தில் வதந்தி பரப்பி, சட்­டம் ஒழுங்கை கெடுக்க சில அர­சி­யல் சக்­தி­கள் முயற்சி செய்­வ­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெற்ற கருத்­த­ரங்­கில் பேசிய அவர், எல்லா துறை­க­ளி­லும் தொழில்­நுட்­பம் புரட்­சியை ஏற்­ப­டுத்தி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"தமி­ழ­கத்­தில் தக­வல் தொழில்­நுட்பப் புரட்­சிக்கு வித்­திட்­ட­வர் முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நிதி. தொழில்­நுட்ப வளர்ச்­சி­யால் கல்வி அறிவு விரல் நுனி­யில் வந்­து­விட்­டது. கைய­டக்க தொலை­பே­சி­யில் அனைத்து புத்­த­கங்­களும் கிடைக்­கின்­றன," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

தமி­ழ­கத்­தில் தக­வல் தொழில்­நுட்­பத் துறை பணி­யா­ளர்­கள் அதி­க­ள­வில் வளர கார­ணம் திமுக அர­சு­தான் என்­றும் அத்­துறை­யில் தமி­ழ­கம் முதல் இடத்தைப் பிடிக்க நடப்பு அரசு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

தக­வல் தொழில்­நுட்­பம் சார்ந்த திட்­டங்­களில் தமி­ழ­கம் முன்­னோடி மாநி­ல­மா­கத் திகழ்­கிறது என்­றும் தக­வல் தொழில்­நுட்­பத்தை மேம்­ப­டுத்த ஆலோ­சனைக் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­வித்­தார்.

"இன்­றைய கால­கட்­டத்­தில் தர­வு­கள்­தான் முக்­கிய எரி­பொருள். ஆனால், வதந்தி பரப்பி, சட்­டம் ஒழுங்கை கெடுக்க சில அர­சி­யல் சக்­தி­கள் தக­வல் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­ன.

"இளைய தலை­முறை தக­வல் தொழில்­நுட்­பத்தை தங்­க­ளின் வளர்ச்­சிக்கு மட்­டுமே பயன்­படுத்த வேண்­டும்.

"இணை­யச் சூதாட்­டம் மனித உயிர்­களைப் பலி­வாங்­கு­கிறது. எனவே இளைய தலை­மு­றை­யி­னர் தக­வல் தொழில்­நுட்­பத்தை சரி­யாகப் பயன்­ப­டுத்தி வாழ்­வில் முன்­னேற்­றம் அடைய வேண்­டும்," என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வு­றுத்­தி­னார்.