சென்னை: தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அவர், சீர்திருத்த, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணங்களில் தாம் தொடர்ந்து பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
"இன்று நடந்திருப்பது ஒரு தமிழ்த் திருமணம் என்றும் சொல்லலாம். தமிழுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய வகையில் செம்மொழி என்கிற அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தார் காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதி.
"இன்றைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுயமரியாதை, சீர்திருத்த திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
"அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். உங்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.

