தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒருங்கிணைந்த விமான நிலையம் 27ல் திறப்பு

2 mins read
2b499f94-6117-43cd-8394-03a6a82de928
-

பிரதமர் மோடி திறக்கிறார்; பயணிகளின் எண்ணிக்கை 3.5 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

சென்னை: சென்னை மீனம்­பாக்க விமான நிலை­யத்­தில் விரி­வாக்­கப் பணி­கள் நிறை­வ­டைந்து ரூ.2,400 கோடி திட்ட மதிப்­பில் 2.36 லட்­சம் சதுர மீட்­ட­ரில் புதிய ஒருங்­கி­ணைந்த விமான நிலை­யம் உரு­வாகிவிட்டது.

இதனை இம்­மா­தம் 27ஆம் தேதி பிர­த­மர் மோடி சென்­னை­யில் திறந்து வைக்­க­வி­ருக்­கி­றார்.

ஒருங்­கி­ணைந்த விமான முனை­யங்­க­ளின் முதல் கட்­டப் ­ப­ணி­கள் நிறை­வ­டைந்­துள்­ளன.

இந்த முனை­யம் செயல்­பாட்­டுக்கு வந்­த­தும், சென்னை விமான நிலை­யத்­தில், கூடு­த­லாக உள்­நாட்டு மற்­றும் வெளி­நாட்டு விமா­னங்­கள் இயக்­கப்­ப­டு­வ­தால் பய­ணி­கள் எண்­ணிக்கை பெரு­ம­ளவு அதி­க­ரிக்கவிருக்கிறது.

தற்­போது சென்னை விமான நிலை­யத்­தில் பய­ணி­கள் எண்­ணிக்கை 2.2 கோடி­யாக உள்­ளது. புதிய முனை­யம் செயல்­பாட்­டுக்கு வந்த பின்பு 3.5 கோடி­யாக (35 மில்லியன்) அதிகரிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தப் புதிய முனை­யத்­தில், கீழ் தளத்­தில் பய­ணி­யர் உடை­மை­கள் கையா­ளப்­படவுள்­ளன.

தரைத் தளத்­தில் அனைத்­து­ல­கப் பய­ணி­கள் வருகை பகு­தி­யாக பயணிகளுக்­கான வழக்க­மான நடை­மு­றை­கள் கையா­ளப்­படும்.

இரண்­டா­வது தளத்­தில், பயணி­ய­ருக்­கான புறப்­பாடு நடை­மு­றை­கள் மேற்­கொள்­ளும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளன. இதர தளங்­களில் விமான நிறு­வன அலு­வ­ல­கங்­கள், பய­ணி­கள் ஓய்வு அறை­கள், மற்­றும் நிர்­வா­கம் சம்­பந்­தப்­பட்ட அலு­வ­ல­கங்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

மொத்­தம் ஐந்து தளங்­க­ளுடன் இந்­தப் புதிய முனை­யம் உரு­வாகி வரு­கிறது.

புதிய விமான முனை­யத்­தின் முதற்­கட்ட கட்­டு­மா­னப் பணி­கள் நிறை­வ­டைந்து விட்­டன. தற்­போது நவீன கரு­வி­கள், உப­க­ர­ணங்­கள் பொருத்­தப்­பட்டு, கரு­வி­கள், உப­க­ர­ணங்­க­ளின் சோத­னை­கள் நடந்து வரு­கின்­றன.

இந்த நிலை­யில் இந்­தப் புதிய முனை­யத்தை, ஒட்டு மொத்­த­மாக பிர­த­மர் நரேந்­திர மோடி இம்­மா­தம், 27 ஆம் தேதி திங்­கள் கிழமை சென்னை விமான நிலை­யத்­தில் நடக்­கும் விழா­வில் முறைப்­படி தொடங்கி வைக்­ கிறார்.

இதற்­காக பிர­த­மர் நரேந்­திர மோடி டெல்­லி­யில் இருந்து தனி விமா­னத்­தில் மதுரை சென்று, அங்­கி­ருந்து ஹெலி­காப்­ட­ரில் ராமேஸ்­வ­ரம் சென்று, சில நிகழ்ச்­சி­களில் பங்கேற்ற பிறகு ஹெலி­காப்­ட­ரில் மதுரை வந்து, மது­ரை­யில் இருந்து தனி விமா­னத்­தில் சென்னை விமான நிலை­யம் வரு­கி­றார்.

இந்தப் புதிய ஒருங்­கி­ணைந்த விமான நிலை­யம் திறக்­கப்­படும் நிகழ்ச்­சி­யில் தமிழ்­நாடு முதல்­வர் மு.க.ஸ்டா­லின், மத்­திய அமைச்­சர்­கள் பலர் கலந்து கொள்­கின்றனர். சென்னை விமான நிலைய அதி­கா­ரி­கள் தரப்­பில் இத்­த­க­வல்­கள் தெரி­விக்­கப்­பட்­டது. பிர­த­மர் சென்னை வருகை பற்றி அதி­கா­ர­பூர்­வ­மான அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கும் என எதி­ர்பார்க்­கப்­ப­டு­கிறது.