கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்ட சிவசக்தி சாய் கோயிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி கோவை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து விட்டனர்.
அது மட்டுமல்லாமல் அங்கு இருந்த 25 ஆண்டு பழமையான சந்தன மரத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கோயில் இடிக்கப்பட்டதைக் கேள்வியுற்ற இந்து முன்னணியினர் அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது பேசிய மாநில நிர்வாகக் குழு உறுப்பினரான சதீஷ், "இந்து கோயில்கள் மட்டுமே குறி வைத்துத் தாக்கப்படுகிறது. தனியார் பள்ளியின் முன்வாசல் மாநகராட்சி பகுதியில் உள்ளது. அதை ஏன் இடிக்கவில்லை," என்று கேட்டார்.

