பிளஸ்-2 தமிழ்த் தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள்; அதிர்ச்சித் தகவல்

1 mins read
5aad791f-5801-4165-a704-f4c5e8722939
பிளஸ்-2 தேர்­வில் 50,000 மாண­வர்­கள் தமிழ்ப் பாடத் தேர்வு எழு­தா­தது பெரும் சர்ச்­சை­யைக் கிளப்­பி­யி­ருக்­கிறது. படம்: த இந்து -

சென்னை: பிளஸ்-2 தேர்­வில் 50,000 மாண­வர்­கள் தமிழ்ப் பாடத் தேர்வு எழு­தா­தது பெரும் சர்ச்­சை­யைக் கிளப்­பி­யி­ருக்­கிறது. தமிழ்­நாட்­டில் ஆண்­டு­தோ­றும் 25 லட்­சம் முதல் 27 லட்­சம் மாண­வர்­கள் 10ஆம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்­வு­களை எழு­து­கின்­ற­னர்.

ஒவ்­வொரு ஆண்­டும் 3 முதல் 4 விழுக்­காடு மாண­வர்­கள் தேர்வு எழு­தா­மல் இருப்­பது வழக்­கம். இந்த நிலை­யில் சென்ற திங்­கள்­கி­ழமை தொடங்­கிய பிளஸ்-2 தமிழ்த் தேர்வை 50,674 மாண­வர்­கள் எழுத­வில்லை என்­பது பெரும் அதிர்­வ­லை­யைக் கிளப்­பி­யி­ருக்­கிறது.

பள்ளிப் படிப்­பின் இறுதி கட்­ட­மான பிளஸ்-2 பொதுத்தேர்வில் தாய் மொழி­யான தமிழ் பாடத்­தையே 50,674 மாண­வர்­கள் எழு­தா­மல் புறக்­க­ணித்­தது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­விட்­டது.

கடந்த ஆண்டு 32,000 மாண­வர்­கள் முதல் நாளில் தேர்வு எழுத வராத நிலை­யில் இவ்­வாண்டு கூடு­த­லாக 18,000 மாண­வர்­கள் தேர்வு எழுத வரா­தது பற்றி கல்வித்துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்த உத்­த­ர­விட்­டுள்­ள­னர்.