நெல்லையில் மீனவக் குடும்பங்கள் கடலில் இறங்கிப் போராட்டம்

நெல்லையில் மீனவக் குடும்பங்கள் கடலில் இறங்கிப் போராட்டம்

1 mins read
43f45d73-5965-4e2a-9be0-728d8b5d746b
-

நெல்லை: நீண்ட நாள் கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி நெல்லை மாவட்ட மீன­வர்­கள் நடத்தி வரும் தொடர் போராட்­டம் நேற்று ஆறா­வது நாளாக நீடித்­தது. அப்­போது மீன­வர்­கள் கண்­களில் கறுப்­புத் துணி கட்டி தங்­கள் எதிர்ப்பை பதிவு செய்­த­னர்.

நெல்லை மாவட்­டம் கூடு­தாழை கடற்­ப­கு­தி­யில் கடல் அரிப்பு அதி­க­ரித்து வரு­வ­தாக மீன­வர்­கள் கூறு­கின்­ற­னர். இத­னால் அப்­பா­திப்­பைத் தடுக்­கும் வகை­யில் தூண்­டில் வளைவு அமைக்க வேண்­டும் என்­பது அவர்­க­ளின் கோரிக்கை.

இதை வலி­யு­றுத்தி கடந்த 11ஆம் தேதி முதல் மீன­வர்­கள் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

கட­லுக்கு மீன்­பி­டிக்­கச் செல்­லா­மல் ஆர்ப்­பாட்­டம், மனி­தச்­சங்­கிலி, பட­கு­கள் மீது கறுப்­புக்­கொடி ஏற்­று­வது எனப் பல்­வேறு வித­மாக மீன­வர்­க­ளின் போராட்­டம் நீடித்து வரு­கிறது.

ஐந்­தாம் நாளன்று கஞ்சி காய்ச்­சும் போராட்­டம் நடந்­தது. இதில் நெல்லை, தூத்­துக்­குடி மாவட்ட மீன­வர்­கள் திர­ளா­கப் பங்­கேற்­ற­னர்.

இதை­ய­டுத்து ஆறாம் நாளான நேற்று, மீன­வர்­கள் தங்­கள் குடும்பத்துடன் கட­லில் இறங்கி போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். மேலும் தங்கள் கண்­களில் கறுப்­புத்துணி கட்­டிக்­கொண்டு தங்­கள் கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி முழக்­கங்­கள் எழுப்­பி­னர்.

தூண்­டில் வளைவு அமைப்­பது, மீன­வர்­க­ளின் பாது­காப்பு உறுதி செய்ய நட­வ­டிக்­கை­கள் எடுப்­பது என்­பன உள்­ளிட்ட கோரிக்­கை­கள் நிறை­வே­றும் வரை தங்­க­ளு­டைய போராட்­டம் நீடிக்­கும் என அவர்­கள் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ள­னர்.