தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட்டாசு ஆலை வெடித்து இரு பெண்கள் மரணம்

2 mins read
e720a1e5-1481-485c-a4ef-10a37674c815
-

தரு­ம­புரி: தரு­ம­புரி மாவட்­டம் பென்­னா­க­ரம் அடுத்­துள்ள நாக­தா­சம்­பட்டி பகு­தி­யில் பட்­டாசு தயா­ரிக்­கும் ஆலை இயங்கி வரு­கிறது. இந்த ஆலை­யில் ராக்­கெட், வாண­வெடி உள்­பட பல பட்­டா­சு­கள் தயா­ரித்து விற்­பனை செய்து வரு­கின்­ற­னர்.

விற்­பனை செய்­வ­தற்­காக ஆலை­யி­லுள்ள சரக்கு வைப்­ப­றை­யில் ஏரா­ள­மான பட்­டா­சு­கள் வைக்­கப்­பட்டு இருந்­தன. நேற்­றுக் காலை அந்த ஆலை­யில் அதே பகு­தி­யைச் சேர்ந்த பழ­னி­யம்­மாள், 50, காவேரி மனைவி முனி­யம்­மாள், 65, சிவா­லிங்­கம் ஆகிய மூன்று பெண்­கள் வேலை செய்து கொண்­டி­ருந்­த­னர். அப்­போது சரக்கு வைப்­ப­றை­யில் இருந்து திடீ­ரென புகை வந்­தது. அடுத்த ஒரு­சில வினா­டி­களில் பயங்­கர சத்­தத்­து­டன் அந்த அறை வெடித்துச் சித­றி­யது. இத­னால் அரு­கில் உள்ள வீடு­கள் குலுங்­கின. வெடிப்­புச் சத்­தத்­தைக் கேட்டு அக்­கம் பக்­கத்­தி­னர் பீதி­யு­டன் ஓடி வந்து பார்த்­த­னர்.

அப்­போது பட்­டாசு தயா­ரிக்­கும் ஆலை­யின் சரக்கு வைப்­பறை சின்­ன­பின்­ன­மா­கிக் கிடந்­தது. அங்கு வேலை செய்த முனி­யம்­மாள், பழ­னி­யம்­மாள் ஆகிய இரு­வ­ரும் சம்­பவ இடத்­தி­லேயே உடல் சிதறி உயி­ரி­ழந்­த­னர். மேலும் சிவா­லிங்­கம் என்ற பெண், படு­கா­யத்­து­டன் உயி­ருக்­குப் போரா­டிக்­கொண்­டி­ருந்­தார். உடனே அவரை மீட்டு சிகிச்­சைக்­காக அரசு மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர். அங்கு அவ­ருக்கு மருத்­து­வர்­கள் தீவிர சிகிச்சை அளித்து வரு­கின்­ற­னர்.

ரூ.3 லட்சம் நிவாரணம்

இந்­நி­லை­யில், பட்­டாசு ஆலை விபத்து குறித்து தாம் கவ­லை­யுற்­ற­தாக முதல்­வர் மு.க. ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார். உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்குத் தலா ரூ. 3 லட்­சம், கடுமையாகக் காய­ம­டைந்து சிகிச்சை பெற்­று­வ­ரும் சிவாலிங்­கத்­துக்கு ரூ.1 லட்­சம் முதல்­வ­ரின் பொது நிவா­ரண நிதி­யி­லி­ருந்து வழங்­க உத்­த­ர­விட்­டார்.