வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏற்பாடுகள்

வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏற்பாடுகள்

1 mins read
75a3c0c2-bfb0-4fcf-b295-548b22c329fb
கோடை வெயி­லின் தாக்­கம் தமி­ழ­கத்­தில் தொடங்­கி­விட்­டது. படம்: ராய்ட்டர்ஸ் -

சென்னை: கோடை வெயி­லின் தாக்­கம் தமி­ழ­கத்­தில் தொடங்­கி­விட்­டது. வெப்­பத்­தின் தீவி­ரத்­தால் ஏற்­படும் பாதிப்­பு­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்கு ஏது­வாக மருத்­து­வக் கட்­ட­மைப்­பு­களை தயாா்நி­லை­யில் வைத்­தி­ருக்­கு­மாறு மாவட்ட நிா்வாகங்­க­ளுக்கு பொது சுகா­தா­ரத் துறை உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது­கு­றித்து பொது சுகா­தாரத் துறை இயக்­குநா் டாக்டர் செல்­வ­வி­நா­ய­கம் அனைத்து மாவட்ட சுகா­தா­ரத் துறை இணை இயக்­கு­நா்­க­ளுக்­கும் சுற்­ற­றிக்கை அனுப்­பி­யுள்­ளார்.

அந்த சுற்­ற­றிக்­கை­யில், "கோடை வெப்­பத்­தின் எதிர் ­விளை­வு­க­ளைக் கையாள விரி­வான செயல்­திட்­டத்தை வகுக்க வேண்­டும். மருத்­து­வ­ம­னை­கள், ஆரம்ப சுகா­தார நிலை­யங்­களில் போதிய அளவு மருந்­து­கள், உப்பு-சா்க்கரை கரை­சல் உள்­ளிட்­ட­வற்றை இருப்­பில் வைத்­தி­ருத்­தல் அவ­சி­யம்," என்று குறிப்­பிட்டு உள்­ளார்.

அதே­போல, பொது­மக்­க­ளும் வெயில் தீவி­ர­மாக இருக்­கும் நேரங்­களில் வெளி­யில் செல்­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என பொது சுகா­தா­ரத் துறை ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது.