தூத்துக்குடி: கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதாகக் கூறி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணித் தலைவர் தினேஷ் ரோடி தலைமையிலான நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்தனர். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தினேஷ் ரோடியை கட்சியிலிருந்து ஆறு மாதம் இடைநீக்கம் செய்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் புதன்
கிழமை இரவு உத்தரவிட்டார். இந்நிலையில் தினேஷ் ரோடியை மீண்டும் கட்சியில் சேர்த்து பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி நேற்றுக் காலை உத்தரவிட்டார். நீக்கப்பட்டவர் 12 மணி நேரத்திற்குள் மீண்டும் சேர்க்கப்பட்டதால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

