ஈரோடு: பால் கொள்முதல் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கடந்த இரு நாள்களாக மாநிலம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பல இடங்களில் பால் வியாபாரிகள் பாலை சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஈரோட்டில் பாலை சாலையில் கொட்டியதுடன்ம், கறவை மாடுகளுடன் பால் வியாபாரிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அப்போது பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும், கால்நடைத் தீவனங்களை 50% மானிய விலையில் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பால் உற்பத்தியாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் ராமசாமி, மாநிலம் முழுவதும் ஆவின் நிறுவனத்துக்கு பால் உற்பத்தியாளர்கள் தரக்கூடிய பால் அளவு படிப்படியாகக் குறையும் என்றும் விரைவில் பால் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தப் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கான பால் விநியோகத்தில் தடை ஏற்படக்கூடிய அபாயம் நிலவி வருகிறது.


