மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்றுகிறது திமுக

மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்றுகிறது திமுக

2 mins read

22 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

மாமல்­ல­பு­ரம்: மாமல்­ல­பு­ரம் பேரூ­ராட்­சியை சுமார் இரு­பத்து இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு திமுக கைப்­பற்­று­கிறது. இத­னால் திமு­க­வி­னர் உற்­சா­கம் அடைந்­துள்­ள­னர்.

கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் நடை­பெற்ற நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் தமி­ழ­கத்­தின் பெரும்­பா­லான பகு­தி­களில் திமுக அமோக வெற்றி பெற்­றது.

எனி­னும் மாமல்­ல­பு­ரம் பேரூ­ராட்­சி­யில் அதி­மு­க­வின் கை ஓங்­கி­யது. பேரூ­ராட்­சி­யில் மொத்­தம் உள்ள 15 இடங்­களில் ஒன்­பது இடங்­களில் அதி­முக வென்­றது.

திமு­க­வுக்கு நான்கு இடங்­க­ளி­லும் மதி­முகவுக்கு ஒரே ஒரு இடத்­தி­லும் வெற்றி கிட்­டி­யது. சுயேச்சை ஒரு­வ­ரும் வென்­றார்.

இதை­ய­டுத்து பேரூ­ராட்சி தலை­வர், துணைத் தலை­வர் பத­வி­கள் அதி­மு­க­வுக்­குச் சென்­றன.

இந்­நி­லை­யில் அதி­மு­க­வைச் சேர்ந்த இரண்டு கவுன்­சி­லர்­கள் திடீ­ரென திமு­வுக்கு தாவி­யுள்­ள­னர். அவர்­கள் நேற்று முன்­தி­னம் அமைச்­சர் அன்­ப­ர­ச­னி­டம் ஆசி பெற்­ற­தா­க­வும் திமுக உறுப்­பி­னர்­க­ளா­கச் செயல்­ப­டத் தொடங்­கி­விட்­ட­தா­க­வும் தெரி­வித்­த­னர். மேலும், சுயேச்­சை­யாக வென்­ற­வ­ரும் திமு­க­வுக்கு ஆத­ர­வாக உள்­ளார். இதன் மூலம் பேரூ­ராட்­சி­யில் திமு­க­வின் பலம் 8ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இதை­ய­டுத்து பேரூ­ராட்சி நிர்­வா­கம் மீது நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னம் கொண்டு வரப்­படும் என திமுக அறி­வித்­துள்­ளது.

இதன் மூலம் 22 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் மாமல்­ல­பு­ரம் பேரூ­ராட்­சியை திமுக கைப்­பற்ற உள்­ளது.

இதற்­கி­டையே அதி­மு­க­வில் பிளவை ஏற்­ப­டுத்தி பேரூ­ராட்சி நிர்­வா­கத்தை திமுக கைப்­பற்­று­வது முற்­றி­லும் ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மா­னது என அதி­முக குற்­றம்­சாட்டி உள்­ளது.

இது தொடர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மாமல்­ல­பு­ரம் அதி­முக நிர்­வா­கி­கள், திமு­க­வின் இத்­த­கைய மோச­மான செயல்­பாட்­டைக் கண்­டித்து அதி­முக போராட்­டம் நடத்­தும் என்­ற­னர்.

இந்­நி­லை­யில், திமுக அரசு சிறப்­பா­கச் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் அதன் கார­ண­மா­கவே மாமல்­ல­பு­ரம் மக்­க­ளின் நலன் கருதி திமு­க­வில் இணைந்­த­தாக அணி மாறிய இரு கவுன்­சி­லர்­களும் கூறி­யுள்­ள­னர்.

தங்­க­ளு­டைய இம்­மு­டி­வால் மாமல்­ல­பு­ரம் பகு­தி­யில் விரை­வில் நல்ல திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­படும் என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.