ரூ.10,000 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்: அரசு அறிவிப்பு

ரூ.10,000 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்: அரசு அறிவிப்பு

2 mins read

சென்னை: பத்­தா­யி­ரம் கோடி ரூபாய் செல­வில் புதிய கூட்­டுக் குடி­நீர் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட இருப்­ப­தாக தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

நாகப்­பட்­டி­னம், மதுரை, திரு­வா­ரூர், ராம­நா­த­பு­ரம், திண்­டுக்­கல், விரு­து­ந­கர், தூத்­துக்­குடி ஆகிய மாவட்­டங்­களில் இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

தமிழ்­நாடு குடி­நீர் வடி­கால் வாரி­யத்­தின் சார்­பில் இத்­திட்­டம் மேற்­கொள்­ளப்­படும்.

இந்த அறிவிப்பை ஏழு மாவட்ட மக்களும் வரவேற்றுள்ளனர்.

இதன் மூலம் மேற்­கு­றிப்­பிட்ட மாவட்­டங்­களில் உள்ள 3,800க்கும் மேற்­பட்ட ஊர­கக் குடி­யி­ருப்­பு­கள் பய­ன­டை­யும் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மிக விரை­வில் தொடங்­கும் இந்­தப் பணி­க­ளுக்கு ஒப்­பந்­தப் புள்­ளி­கள் கோரப்­பட்டு அவை பரி­சீ­ல­னை­யில் உள்­ள­தா­க­வும் சில பணி­க­ளுக்கு விரை­வில் பணி ஆணை வழங்­கப்­பட உள்­ளது என்­றும் அர­சுத்­த­ரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தத் திட்­டப்­ப­ணி­கள் அனைத்­தும் உரிய விதி­க­ளின்­படி விரை­வில் தொடங்கி நிர்­ண­யிக்­கப்­பட்ட காலத்­துக்­குள் பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டிற்கு கொண்டு வரப்­படும் என்­றும் தமி­ழக அரசு தெரி­வித்­தது.

நாகப்­பட்­டி­னம் மாவட்­டத்­தில் உள்ள 980 ஊரக குடி­யி­ருப்­பு­க­ளுக்கு ரூ.1,227.23 கோடி மதிப்­பீட்­டி­லும் மதுரை அலங்­கா­நல்­லூர் பகு­தி­யில் 867 ஊர­கக் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு ரூ.1,386.66 கோடி மதிப்­பி­லும், திரு­வா­ரூர் மாவட்­டத்­தில் உள்ள 667 ஊர­கக் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு ரூ.1,062.20 கோடி மதிப்­பீட்­டி­லும் கூட்­டுக் குடி­நீர் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும்.

இதே­போல், ராம­நா­த­பு­ரம்-திண்­டுக்­கல் மாவட்­டங்­களில் ரூ.3,850.76 கோடி மதிப்­பி­லும் விரு­து­ந­கர் தூத்­துக்­குடி மாவட்­டங்­களில் உள்ள 1,286 ஊர­கக் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு ரூ.1,191.05 கோடி மதிப்­பி­லும் நாமக்­கல் மாவட்­டம், ராசி­பு­ரத்­தில் ரூ.854.37 கோடி மதிப்­பீட்­டி­லும் நெல்லை மாவட்­டத்­தில் உள்ள 831 ஊர­கக் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு ரூ.525.06 கோடி மதிப்­பி­லும் கூட்­டுக் குடி­நீர் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ள­தாக தமி­ழக அரசு மேலும் கூறி­யுள்­ளது.

கூட்­டுக் குடி­நீர் திட்­டம் தங்­க­ளுக்­குப் பெரி­தும் பய­ன­ளிக்­கும் என ஏழு மாவட்ட மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கூட்­டுக் குடி­நீர் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த வேண்­டும் என மேற்­கு­றிப்­பிட்ட ஏழு மாவட்ட மக்­கள் நீண்ட நாள்­க­ளாக அர­சுக்கு கோரிக்கை விடுத்து வந்­த­னர்.

இதன் மூலம் ஏழு மாவட்­டங்­களும் பல்­வேறு வகை­யில் பய­ன­டை­யும் என்­றும் அவர்­கள் கூறி வந்த நிலை­யில், தமி­ழக அரசு இத்­திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த உள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இத்திட்டத்தைச் சிக்கலின்றிச் செயல்படுத்த உரிய ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது.