ஈரோடு: பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்க கொள்ளையர்களுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த தலைமைக் காவலர் கைதானார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதுகுறித்து காவல்துறை தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.
இந்நிலையில், பெருந்துறை யில் உள்ள மளிகைக் கடை அருகே சிலர் சந்தேகத்துக்கு ரிய வகையில் நடமாடினர். இதுகுறித்து விசாரித்தபோது அந்தக் கடை ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணி யாற்றும் செந்தில்குமாருக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது. மேலும், அவர்தான் மூன்று பேர் கொண்ட கொள்ளைக் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்டார் என்பதும் அம்பலமானது. இதை யடுத்து தலைமைக் காவலர் உள்ளிட்ட நால்வர் கைதாகினர்.

