தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருவாரூர் நீலக்குடியில் 'பாரம்பரிய நெல் மாநாடு'

1 mins read
88e1a077-349f-4e8d-b70a-68ba58fb4d10
இந்த மாநாட்­டில், பாரம்­ப­ரிய நெல் ரகங்­களில் உள்ள சத்­துக்­கள் குறித்து அறி­வி­யல் பூர்­வ­மாக பொது­மக்­கள் மற்­றும் விவ­சா­யி­கள் தெரிந்­து­கொள்­ளும் வகை­யில் நாடு முழு­வ­தி­லும் இருந்து வந்­தி­ருந்த 25 பல்­க­லைக் கழ­கங்­க­ளைச் சேர்ந்த ஆராய்ச்சி மாண­வர்­கள் மாநாட்­டில் ஆய்­வுக் கட்­டு­ரை­களைச் சமர்ப்­பித்­த­னர். படம்: பிக்ஸாபே -

திரு­வா­ரூர்: திரு­வா­ரூர் அருகே நடந்த தேசிய பாரம்­ப­ரிய நெல் மாநாட்­டில் 25 பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்சி மாண­வர்­கள் ஆய்­வுக் கட்­டு­ரை­களை சமர்ப்­பித்­த­னர். தேசிய பாரம்­ப­ரிய நெல் மாநாட்டு கழ­கம் மற்­றும் மத்­திய பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­யவை இணைந்து நடத்­திய தேசிய பாரம்­ப­ரிய நெல் மாநாடு பல்­க­லைக்­க­ழக துணை­வேந்­தர் கிருஷ்­ணன் தலை­மை­யில் திரு­வா­ரூர் அடுத்த நீலக்­கு­டி­யில் உள்ள தமிழ்­நாடு மத்­திய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மார்ச் 18ஆம் தேதி நடந்­தது.

இந்த மாநாட்­டில், பூண்டி கலை­வா­ணன் எம்­எல்ஏ, பிரான்ஸ் பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர் ஜூலி­யன் ஜின் மலார்டு ஆடம், பாரம்­ப­ரிய நெல் விவ­சாயி தியா­க­பாரி முன்­னிலை வகித்து பேசி­னர்.

இதில், சுற்­றுச்­சு­ழல் மற்­றும் கால­நிலை மாற்­றத்­துறை அமைச்­சர் சிவ. வீ. மெய்­ய­நா­தன் சிறப்பு அழைப்­பா­ள­ராக கலந்­து­கொண்டு மாநாட்­டைத் துவக்கி வைத்து பேசி­னார். மாநாட்­டில், பாரம்­ப­ரிய அரி­சி­களில் உள்ள மருத்­து­வக் குணங்­கள் மற்­றும் வெளி­நா­டு­க­ளுக்கு பாரம்­ப­ரிய அரி­சியை ஏற்­று­மதி செய்­யும் வகை­யில் அதற்­கான பாரம்­ப­ரிய நெல் ரகங்­க­ளின் முக்­கி­யத்­து­வம் குறித்­தும் மாநாட்­டில் எடுத்­து­ரைக்­கப்­பட்­டது.

இந்த மாநாட்­டில், பாரம்­ப­ரிய நெல் ரகங்­களில் உள்ள சத்­துக்­கள் குறித்து அறி­வி­யல் பூர்­வ­மாக பொது­மக்­கள் மற்­றும் விவ­சா­யி­கள் தெரிந்­து­கொள்­ளும் வகை­யில் நாடு முழு­வ­தி­லும் இருந்து வந்­தி­ருந்த 25 பல்­க­லைக் கழ­கங்­க­ளைச் சேர்ந்த ஆராய்ச்சி மாண­வர்­கள் மாநாட்­டில் ஆய்­வுக் கட்­டு­ரை­களைச் சமர்ப்­பித்­த­னர்.