சிற்பக்கூடத்தில் புகுந்த பாம்பைக் கடித்துக்கொன்ற வளர்ப்பு நாய்

சிற்பக்கூடத்தில் புகுந்த பாம்பைக் கடித்துக்கொன்ற வளர்ப்பு நாய்

1 mins read
a7b1c984-525c-4428-a19c-7951cfe347d9
நீண்ட நேரம் பாம்பை நாய் கடித்துக் குதறியதால், சிறிது நேரத்தில் அந்த பாம்பு அங்கேயே உயிரிழந்தது. பாம்பு உயிரிழந்த பின்புதான், அந்த நாய் சமாதானமடைந்தது. படம்: பிக்ஸாபே -

ஓசூர்: கிருஷ்ண கிரி மாவட்டம், ஓசூரில் ஒரு சிற்ப கலைக்கூடத்தில் ஏராளமானோர் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நல்லபாம்பு ஒன்று அங்கு புகுந்தது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது பாம்பை பார்த்த சிற்ப கலைக்கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் நாய் ஒன்று, அதனைக் கடித்தது. அப்போது, பாம்பு படம் எடுத்து அந்த நாயைத் தீண்ட முற்பட்டது. இதில் பாம்புக்கும் நாய்க்கும் கடுமையான சண்டை ஏற்பட்டது. பரபரப்பான இந்தச் சண்டையில் கடும் கோபத்தில் இருந்த நாய், பாம்பைக் கடித்துக் குதறியது. நீண்ட நேரம் பாம்பை நாய் கடித்துக் குதறியதால், சிறிது நேரத்தில் அந்த பாம்பு அங்கேயே உயிரிழந்தது. பாம்பு உயிரிழந்த பின்புதான், அந்த நாய் சமாதானமடைந்தது.