பகுதி நேர வேலை: இணையம் வழி பண மோசடி செய்யும் கும்பல்

பகுதி நேர வேலை: இணையம் வழி பண மோசடி செய்யும் கும்பல்

2 mins read

சென்னை: பகுதி நேர வேலை தரு­வ­தா­கக் கூறி ஏமாற்­றும் மோசடிக் கும்­பல் குறித்து பொது­மக்­கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும் என தமி­ழக காவல் துறை­யி­ன் இணைய குற்­றத் தடுப்புப் பிரிவு அறி­வு­றுத்தி உள்ளது.

பகுதி நேர வேலை இருப்­ப­தாகக் குறிப்­பிட்டு இந்­தக் கும்­பல் அனுப்­பும் கைப்­பேசி இணைப்­பைத் தொட்­டால் பெருந்­தொகையை இழக்க நேரி­டும் என்று காவல்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

முதற்­கட்­ட­மாக இந்­தக் கும்­பல் இணைய இணைப்பு ஒன்றை கைப்­பேசி மூலம் அனுப்­பும். அதை தொட்­டுத் திறந்­தால் காணொ­ளிப்­ப­திவு ஒன்று தோன்­றும். இதை­ய­டுத்து, உங்­கள் கணக்­கில் 300 முதல் 500 ரூபாய் வரவு வைக்­கப்­ப­டு­வ­தாக தக­வல் வந்து சேரும்.

இத­னால் உற்­சா­கம் அடைந்­த­வர்­கள் அந்த கும்­பல் கேட்­கும் கூடு­தல் விவ­ரங்­களை அளிக்­கும்­போது குறிப்­பிட்ட ஒரு டெலி­கி­ராம் செயலி குழு­வில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வர்.

அதன் பின்­னர் தாங்­கள் அளிக்­கும் வேலையைச் செய்து முடித்­தால் அதற்­கு­ரிய தொகை­யும் ஊக்­கத்­தொ­கை­யாக 60% அளிக்­கப்­படும் என்­றும் தெரி­விப்­பர். இவ்­வாறு சிறு முன்­தொகை கொடுத்து பணி­க­ளைப் பெற்று, அவற்­றைச் செய்து முடிக்­கும்­போது அவ­ரது கணக்­கில் குறிப்­பிட்ட தொகை வரவு வைக்­கப்­படும். இவ்­வாறு ரூ.15,000 வரை பணம் சம்­பா­தித்­த­வர்­க­ளுக்கு திடீ­ரென பணி ஒன்றை ஒப்­ப­டைப்­ப­தா­கக் கூறி அதற்கு ஐந்து லட்­சம் ரூபாய் வரை முன்­ப­ணம் செலுத்­தச் சொல்­வார்­கள்.

"இதன் மூலம் பத்து லட்­சம் ரூபாய் வரை சம்­பா­திக்­க­லாம் என்று கணக்­கிட்டு பணத்­தைச் செலுத்­து­ப­வர்­கள் ஏமாற நேரி­டும்.

"பணம் கிடைக்­க­வில்­லையே என்று அந்­தக் கும்­ப­லைத் தொடர்பு கொள்­ளும்­போது பத்து லட்­சம் ரூபாய்க்கு இரு­பது விழுக்­காடு வரு­மான வரி செலுத்த வேண்­டும் என்று கூறு­வர்.

"இப்­படி ஏதே­னும் ஒரு கார­ணத்­தைச் சொல்லி தொடர்ந்து பணம் பறிப்­ப­தி­லேயே குறி­யாக இருப்­பர். இவ்­வாறு பணி­களை எடுத்­துச் செய்து பணம் சம்­பா­திக்க விரும்­பா­த­வர்­கள், ஓய்வு பெற்­ற­வர்­கள் தங்­கள் பணத்தை முத­லீடு செய்­ய­லாம் என்­றும் ஆசை வார்த்தை கூறி பணம் பறிப்­ப­தும் நடக்­கிறது.

"இத­னால் தங்­க­ளது ஒட்­டு­மொத்த ஓய்­வூ­தி­யப் பணத்தை இழந்து தவிப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது," என்று தமி­ழக காவல்­துறை எச்சரித்­துள்­ளது.