ஏப்ரல் 29 முதல் யாழ்ப்பாணம், காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து

ஏப்ரல் 29 முதல் யாழ்ப்பாணம், காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து

1 mins read

சென்னை: எதிர்­வ­ரும் ஏப்­ரல் 29ஆம் தேதி முதல் இலங்­கை­யின் யாழ்ப்­பா­ணம், காரைக்­கால் இடையே பய­ணி­கள் கப்­பல் போக்­கு­வ­ரத்து தொடங்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காங்­கே­சன் துறை­யில் இருந்து காரைக்­கா­லுக்கு இயக்­கப்­படும் பய­ணி­க­ளுக்­கான கப்­ப­லில் முதற்­கட்­ட­மாக 120 பய­ணி­கள் வரை பய­ணம் மேற்­கொள்ள இய­லும். ஒவ்­வொரு பய­ணி­யும் தலா நூறு கிலோ எடை­யுள்ள பொருள்­க­ளைக் கொண்டு செல்­ல­லாம். இதற்­காக இந்­திய மதிப்­பில் ரூ.9878 கட்­ட­ணம் செலுத்த வேண்­டும்.

காரைக்­கா­லில் இருந்து காங்­கே­சன் துறைக்கு கப்­பல் போக்­கு­வ­ரத்­தைத் தொடங்க ஐந்து நிறு­வ­னங்கள் விண்­ணப்­பித்­தி­ருந்­தன.

அவற்­றுள் ஐஎன்­டி­எஸ்­ஆர்ஐ என்ற நிறு­வ­னத்­துக்கு அனு­மதி கிடைத்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள காங்­கே­சன்­துறை இலங்­கை­யின் பிற பகு­தி­களை இணைக்­கும் முக்­கிய இட­மாக உள்­ளது. மேலும், இந்­தி­யா­வுக்கு மிக அரு­கில் நாகை, காரைக்­கால் பகு­திக்கு 56 கடல் மைல் (100 கி.மீ.) தொலை­வில் அமைந்­துள்­ளது காங்­கே­சன்­துறை துறை­மு­கம்.

இலங்­கை­யில் உள்­நாட்­டுப் போர் தீவி­ர­ம­டைந்­த­போது, இரு­த­ரப்­பி­ன­ரும் மாறி மாறி நடத்­திய தாக்­கு­தல்­க­ளின்­போது காங்­கே­சன்­துறை துறை­மு­கம் பலத்த சேத­ம­டைந்­தது. அதன் பின்­னர் அத்­து­றை­மு­கத்­தைச் சீர­மைக்க இந்­திய அரசு உத­விக்­க­ரம் நீட்­டி­யது.