தஞ்சை: 45 ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளி ஆசிரியரை சந்தித்த சரவாக் துணை முதல்வர்

1 mins read
e4df8f34-53a2-46b4-9a82-67bb12ae6dcf
-

தஞ்­சா­வூர்: சிறு வய­தில் தனக்­குப் பள்­ளி­யில் பாடம் நடத்­திய ஆசி­ரி­யரை தேடிச்­சென்று நன்றி தெரி­வித்­துள்­ளார் மலே­சி­யா­வின் சர­வாக் மாநில துணை முதல்­வர் அவாங் தெங்கா அலி ஹஸன்.

தஞ்­சா­வூர் மாவட்­டம், பாபநாசம் பகு­தி­யில் வசித்து வரும் 89 வய­தான அப்­துல் லத்­தீப் 55 ஆண்­டு­க­ளாக மலே­சி­யா­வில் பள்ளி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வந்­தார். அவ­ரது மாண­வர்­களில் துணை முதல்­வ­ரும் ஒரு­வர்.

தனது ஆசி­ரி­யர் வசிக்­கும் இடம் குறித்து தக­வல் அறிந்த துணை முதல்­வர் அவ­ரைச் சந்­திப்­ப­தற்­காக குடும்­பத்­து­டன் பாபநாசம் வந்து சேர்ந்­தார். பின்னர் ஆசி­ரி­யர் அப்­துல் லத்­தீப் வீட்­டிற்குச் சென்ற அவர், அங்கு தனது குடும்­பத்­தி­னரை ஆசி­ரி­ய­ருக்கு அறி­மு­கம் செய்து வைத்து, புகைப்­ப­ட­மும் எடுத்­துக்கொண்­டார்.

தமக்குப் பள்ளியில் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியரை 45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட துணை முதல்வர், 1968ஆம் ஆண்டில் அப்துல் லத்தீ்ப் ஆசிரியராக இருந்தபோது பலருக்கும் நிறைய உதவிகளைச் செய்ததாகக் கூறினார்.