வடசென்னையில் புதிய கடற்கரைப் பகுதி உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

வடசென்னையில் புதிய கடற்கரைப் பகுதி உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

1 mins read

புது­டெல்லி: வட­சென்­னை­யில் புதிய கடற்­க­ரைப் பகுதி உரு­வாக்­கப்­படும் என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

வட­சென்­னை­யில் உள்ள காசி­மேடு பகு­தி­யில் இந்­தப் புதிய கடற்­கரை உரு­வாக்­கப்­படும் என்­றும் இதற்­கான நிதி ஒதுக்­கீடு செய்­யப்­படும் என்­றும் அர­சுத்­தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்னை பெரு­ந­கர வளர்ச்சிக் குழு­மம் இதற்­கான ஆய்வை மேற்­கொள்­ளும். மூத்த அதி­கா­ரி­கள் காசி­மேடு பகு­தி­யில் ஆய்வு மேற்­கொண்டு புதிய கடற்­க­ரையை உரு­வாக்­கு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் குறித்து அர­சுக்கு அறிக்கை அளிக்க உள்­ள­னர்.

சென்­னை­யில் ஏற்­கெ­னவே மெரினா, பெசன்ட்­ ந­கர், திருவான்மி­யூர் பகு­தி­களில் கடற்­க­ரை­கள் உள்­ளன.

இந்­நி­லை­யில் காசி­மேடு பகுதி­யில் அமைக்­கப்­படும் புதிய கடற்­கரை­யா­னது மெரி­னா­வைப் போல் காட்­சி­ய­ளிக்­கும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

"இனி வட­சென்னை பகுதி மக்­கள் நடைப்­ப­யிற்சி மேற்­கொள்ள வேறு எங்­கும் செல்ல வேண்­டி­ய­தில்லை. கடற்­கரைப் பகு­தி­யில் நடை­பாதை, அமர வச­தி­யாக இருக்­கை­கள் கொண்ட ஓய்வு இடம், யோகா செய்­வ­தற்­கான இடம், குழந்­தை­கள் விளை­யா­டும் இடம், திறந்த உடற்­ப­யிற்­சிக் கூடம், மெரினா கடற்­க­ரை­யில் உள்­ள­தைப் போன்ற உணவுக் கடை­கள் என அனைத்து அம்­சங்­களும் புதிய கடற்­க­ரை­யில் பரவலாக அமைந்­தி­ருக்­கும்," என்­றும் அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே நேற்று முன்­தினம் நடை­பெற்ற சென்னை பெரு­ந­கர வளர்ச்­சிக் குழு­மத்­தின் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் அமைச்­சர் சேகர்­பாபு தலை­மை­யில் புதிய கடற்­க­ரையை உரு­வாக்­கு­வ­தற்­கான திட்­டம் குறித்து விவா­திக்­கப்­பட்­டது.

புதிய கடற்­கரை அமைய இருப்­பது சென்னை மக்­களை, குறிப்­பாக வட­சென்னைவாசி­களை உற்­சா­கத்­தில் ஆழ்த்தி உள்­ளது.