சிட்டுக்குருவிகளுக்கு ஏற்ற கூடுகள் தயாரித்து பொது மக்களுக்கு விநியோகிக்கும் கல்லூரி மாணவர்கள்

சிட்டுக்குருவிகளுக்கு ஏற்ற கூடுகள் தயாரித்து பொது மக்களுக்கு விநியோகிக்கும் கல்லூரி மாணவர்கள்

1 mins read
3a498001-5b59-4e66-9776-35a3c8e827d8
-

புது­டெல்லி: அனைத்­து­லக சிட்டுக்­கு­ருவி தினத்­தை­யொட்டி, மதுரை அமெ­ரிக்­கன் கல்­லூரி விலங்­கி­யல் துறை மாண­வர்­கள் சிட்­டுக்­கு­ரு­வி­க­ளுக்­கான கூடுகளைத் தயா­ரித்­த­னர்.

அவற்றை பொது­மக்­க­ளுக்கு வழங்­கும் நிகழ்ச்சி கல்­லூரி வளா­கத்­தில் நடை­பெற்­றது. கடந்த பத்து ஆண்­டு­க­ளாக இக்­கல்­லூரி மாண­வர்­கள் இப்­ப­ணி­யில் ஈடு­பட்டுள்­ள­னர் என்­றும் மாண­வர்­கள் தயா­ரித்து வழங்­கிய கூடு­களால் மதுரை கூடல்­ந­கர் பகு­தி­யில் குரு­வி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளன என்­றும் கல்­லூரி முதல்­வர் தெரி­வித்­தார்.

"சிட்­டுக்குரு­வி­க­ளின் வாழ்நாள் 13 ஆண்­டு­கள்­தான். நமது வீடு­களில் பாது­காப்­பான இடத்­தில் கூடு­கட்டி வசிக்­கும். முன்பு கூரை, ஓட்டு வீடு­களில் அதி­க­ள­வில் வசித்­தன.

"தற்­போது அனைத்­தும் கான்­கி­ரீட் வீடு­க­ளாக மாறி வரு­வ­தால் சிட்­டுக்­கு­ரு­வி­க­ளால் அங்கு வாழ முடி­ய­வில்லை. சிட்­டுக்­கு­ருவி இனம் அழிய கைபேசி கோபு­ரங்­கள் கார­ண­மில்லை. உரம், பூச்சி மருந்­து­கள் ஆகி­யவை அவை அழிய கார­ண­மா­கி­விட்­டன," என்­றார் முதல்­வர்,

உலக சிட்­டுக்­கு­ரு­வி­கள் தினத்­தை­யொட்டி அவற்­றைப் பாது­காப்­பது தொடர்­பான பல்­வேறு விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன. குறிப்­பாக இளை­யர்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த வேண்­டு­மென சமூக ஆர்­வ­லர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.