விவசாயத்தைக் காக்க மாட்டு வண்டியில் பயணம்

விவசாயத்தைக் காக்க மாட்டு வண்டியில் பயணம்

1 mins read
fd25af10-bfcd-4d6d-8d73-4c9314ed1a96
-

குமரி: நாகர்­கோ­வில் அருகே உள்ள மயி­லாடி கிரா­மத்­தைச் சேர்ந்த 25 வய­தான பிர­தாப் லிவி விவ­சா­யத்தைக் காக்க வலி­யு­றுத்தி குமரி முதல் சென்னை வரை குடும்­பத்­து­டன் மாட்டு வண்­டி­யில் விழிப்­பு­ணர்வு பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார்.

பிர­தாப்­பு­டன் அவ­ரது மனைவி, குழந்­தை­களும் இணைந்­துள்­ள­னர். கடந்த ஜன­வரி 11ஆம் தேதி­ கு­ம­ரி­யில் இருந்து மாட்டு வண்­டி­யில் புறப்­பட்ட பிர­தாப் குடும்­பத்­தார், நாள்­தோ­றும் இரு­பது கிலோ மீட்­டர் வரை செல்­கி­றார்­கள்.

பின்­னர் மாட்டு வண்­டியை நிறுத்தி, அப்­ப­கு­தி­யில் இயற்கை விவ­சா­யத்தை மேற்­கொள்ள பிர­சா­ரம் செய்­கி­றார்­கள்.

நேற்று முன்­தி­னம் உளுந்தூர்­பேட்டை அருகே உள்ள திரு­நா­வ­லூர் தேசிய நெடுஞ்­சாலை­யில் வந்­த­போது பொது­மக்­களும் சமூக ஆர்­வ­லர்­களும் பிர­தாப் குடும்­பத்­தா­ருக்கு சிறப்­பான வர­வேற்பு அளித்­த­னர்.

சென்னை மெரினா கடற்­கரைக்குச் சென்று ஒரு நாள் முழு­வ­தும் விவ­சா­யத்­தைப் பற்றி மக்­க­ளி­டம் எடுத்­து­ரைத்து அதன் பின்­னர் முதல்­வ­ரி­டம் கோரிக்கை மனு ஒன்றை அளிக்க விரும்­பு­கி­றார் பிர­தாப்.