ஐஸ்வர்யாவின் நகைகளை விற்று ரூ.1 கோடிக்கு வீடு வாங்கிய பெண்

ஐஸ்வர்யாவின் நகைகளை விற்று ரூ.1 கோடிக்கு வீடு வாங்கிய பெண்

1 mins read
feedf1ba-23a2-4789-ad09-e25c27e004fd
-

சென்னை: நடி­கர் ரஜினி­காந்­தின் மூத்த மகள் ஐஸ்­வர்­யாவின் வீட்­டில் இருந்து திருட்டுப்போன 100 சவ­ரன் நகைகளை­யும் 30 வைர நகை­க­ளை­யும் காவல்­து­றை­யி­னர் மீட்­டுள்­ள­னர்.

அத்­து­டன், நான்கு கிலோ வெள்­ளிப் பொருள்­கள், பாத்­தி­ரங்­கள் ஆகியவற்­றை­யும் காவ­லர்­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

ஐஸ்­வர்யா ரஜி­னி­காந்­தின் தங்கம், வைரம், நவரத்தின நகை­க­ளைக் கடந்த நான்கு ஆண்­டு­களாக சிறு­கச் சிறுகக் கள­வா­டிய பணிப்­பெண் ஈஸ்­வ­ரி­யை­யும் ஓட்டு­நர் வெங்­க­டே­ச­னை­யும் காவல்­து­றை­யி­னர் கைது செய்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

திரு­டிய நகை­களை விற்று ரூ.1 கோடிக்கு வீடு வாங்­கிய தற்­கான ஆவ­ணங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன.

ரஜினி மகள் அளித்த புகாரை அடுத்து, அவ­ரது வீட்­டில் கடந்த 18 ஆண்­டு­க­ளா­கப் பணி­பு­ரிந்து வந்த ஈஸ்­வரி என்ற பணிப் பெண்­ணி­டம் காவ­லர்­கள் தீவிர விசா­ரணை நடத்­தி­னர்.

அப்­போது, அவ­ரது வங்கி விவ­ரங்­களை ஆய்வு செய்­த­தில், நகை­க­ளைத் திரு­டி­யது உறுதி செய்­யப்­பட்­ட­தாகக் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

திரு­டிய நகை­களை விற்று ஒரு வீட்டையும் அந்த வீட்­டுக்­குத் தேவையான பொருள்­களை யும் ஈஸ்­வரி வாங்­கி­யி­ருப்­ப­தும் தெரியவந்துள்ளது.

ஐஸ்வர்யா வீட்டில் இல்லாத போது, அவரது பாது­காப்­புப் பெட்­ட­கத்­தில் இருந்த தங்க நகைகள், பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், நவரத்தின நகைகளைத் திருடியதை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார்.

ஓட்­டு­நர் வெங்­க­டே­சனுடன் சேர்ந்து நகைத் திருட்டில் ஈடுபட்டதாக ஈஸ்­வரி கூறி யுள்ளார்.