15 லட்சத்தில் மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்

15 லட்சத்தில் மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்

1 mins read
d02b9a67-ecea-4183-b330-307aa2164a6c
-

திருப்பத்தூர்: முகலாய மன்ன ரான ஷாஜகான், தன் காதல் மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலைக் கட்டினார். இதேபோல், சுப்பிரமணி என்பவர், தன் மனைவி ஈஸ்வரியின் நினை வாக அவருக்கு கோயில் கட்டி, தினமும் பூசைகள் செய்து வழி பட்டு வருவது அங்குள்ள மக் களை நெகிழவைத்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், மான்கானூர் தக்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

திருமணமாகி 35 ஆண்டுகள் கடந்துபோன நிலையில், சென்ற ஆண்டு ஈஸ்வரி காலமானார்.

இதனால் வேதனையடைந்த சுப்பிரமணி, 15 சென்ட் நிலத்தில் 15 லட்சம் செலவில் கோயில் கட்டி அதில் ஈஸ்வரியின் ஆறடி உயரச் சிலையை நிறுவி, காலை, மாலை பூசை செய்து வருகிறார்.

இம்மாதம் 31ஆம் தேதியன்று ஈஸ்வரியின் முதலாமாண்டு நினைவு தினம் வருவதால், அப்போது 500 பெண்களுக்கு இலவச சேலையுடன் அன்ன தானம் வழங்க உள்ளார்.

இதேபோல், ஆந்திர மாநிலத் தில் பத்மாவதி என்ற பெண் இறந்துபோன கணவர் அங்கி ரெட்டிக்கு பளிங்குக் கல்லால் கோயில் கட்டி சிலை வைத்து வழிபட்டு வருகிறார்.