காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி விஜயா, பூபதி உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பில் கிடங்கு உரிமையாளர் நரேந்திரன் உள் ளிட்ட நால்வர் கைதாகியுள்ளனர்.
காஞ்சிபுரம், குருவிமலை வலத்தோட்டம் பகுதியில் நரேந் திரன் என்பவருக்குச் சொந்தமான தனியார் வெடிபொருள் தயா ரிப்புக் கிடங்கு செயல்பட்டு வரு கிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பணி புரிந்து வந்த நிலையில், நேற்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பலரும் படுகாயமடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர்.

