லட்சக்கணக்கில் உள்ள நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

லட்சக்கணக்கில் உள்ள நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

1 mins read
Google News Preferred Icon

சென்னை: தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரை கும்பலாக நாய்கள் துரத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப் படுத்துவதை மாநகராட்சி தீவிரப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

"சென்னையில் ஒரு லட்சம் நாய்கள்வரை இருக்கலாம். பிடிபடும் நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசியைப் போட்டு வருகிறோம்," என மாநக ராட்சி அதிகாரிகள் கூறினர்.