அன்புஜோதி ஆசிரமம் குறித்து 20 பேரிடம் வாக்குமூலம்

அன்புஜோதி ஆசிரமம் குறித்து 20 பேரிடம் வாக்குமூலம்

1 mins read

விழுப்­பு­ரம்: விழுப்­பு­ரம் அருகே குண்­ட­ல­பு­லி­யூ­ரில் கடந்த 15 ஆண்­டு­க­ளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசி­ர­மத்­தில் நடந்த முறை­கே­டு­கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்­தி­டம் 20 பேர் வாக்கு­மூ­லம் அளித்­துள்­ள­னர்.

காப்­ப­கத்­தில் இருந்த 16 ஆத­ர­வற்­ற­வர்­கள் காணா­மல் போனது, பாலி­யல் சித்­தி­ர­வதை, போதை மருந்து கொடுத்­தது உள்­ளிட்ட புகார்­களில் சிக்கி யிருக்­கும் அன்­பு­ஜோதி ஆசி­ர­மம் தொடர்­பாக தேசிய மனித உரி­மை­கள் ஆணை­யத்­தின் குழுவினர் மூன்று நாள் விசா ரணையைச் செவ்­வாய்க்­கி­ழமை முதல் நடத்தி வருகின்றனர்.

இக்­கு­ழு­வி­னர், அன்பு ஜோதி ஆசி­ரம நிர்­வா­கி­க­ளால் பாதிக்­கப்­பட்டு, முண்­டி­யம்­பாக்­கம் அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பெண்­கள், 14 ஆண்­கள் என ஆகிய 20 பேரி­ட­மும் தனித்­த­னி­யாக விசா­ரணை நடத்தி அவர்­கள் அளித்த வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்து கொண்­ட­னர். தொடர்ந்து, ஆசி­ர­மத்­துக்­குச் சென்று ஆய்வு செய்­யவும் உள்ளனர்.