சென்னை: தமிழ்நாட்டின் அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் வரும் 29ஆம் தேதி புறநோயாளிகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
மருத்துவர்களுக்குச் சம்பள உயர்வு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் இந்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது.
முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சையையும் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தாங்கள் கண்டிப்பதாக மருத்துவச் சங்கம் தெரிவித்து இருக்கிறது.
பிரசவத்தின்போது தாய்-சேய் உயிரிழப்பு ஏற்பட்டால் மருத்துவர்களைக் குற்றவாளிகளைப் போல் கருதும் நடைமுறையை மாவட்ட ஆட்சியர்கள் கைவிட வேண்டும் என்றும் அந்தச் சங்கம் கோரியது.

