சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இந்த நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.
அடுத்த தலைவர் பதவிக்கான போட்டியில் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட பலரும் மும்முரமாக களத்தில் குதித்து இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இப்போதைய தலைவரான கே எஸ் அழகிரியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது.
கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, அண்மையில் கட்சியின் மூத்த தலைவர் சிதம் பரத்துடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்தப் போட்டியில் ஜோதிமணி எம்.பி., விஜயதரணி ஆகியோரும் மும்முரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். இப்போது சிதம்பரத்தின் புதல்வரான கார்த்திக் சிதம்பரத்தின் பெயரும் பரபரப்பாக அடிபடுகிறது.
மொத்தத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி அடுத்த தலைவரை எதிர்பார்த்து படு உற்சாகத்திலும் பரபரப்பிலும் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

