சூதாட்டத் தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்

சூதாட்டத் தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்

1 mins read

சென்னை: தமி­ழக சட்­ட­ச­பை­யில் இணை­யச் சூதாட்டத் தடை சட்ட மசோதா மீண்­டும் நேற்று நிறை­வேற்­றப்­பட்­டது. தமி­ழக அரசு நிறை­வேற்றி அனுப்­பிய இணை­யச் சூதாட்டத் தடை சட்ட மசோ­தாவை இயற்ற தமி­ழக அர­சுக்கு அதி­கா­ரம் இல்லை என்று கூறி கடந்த 6ஆம் தேதி சட்ட மசோ­தாவை அர­சுக்கு ஆளு­நர் ரவி திருப்பி அனுப்­பி­னார்.

அதைத் தொடர்ந்து இணையச் சூதாட்டத் தடை சட்ட மசோ­தாவை மீண்­டும் சட்ட­சபை­யில் நிறை­வேற்றி ஆளு­நர் ஒப்­பு­தலுக்கு அனுப்ப தமி­ழக அமைச்­ச­ரவை முடிவு செய்­தது.

அதன்­படி தமி­ழக சட்­ட­ச­பை­யில் இணை­யச் சூதாட்டத் தடை சட்ட மசோதா மீண்­டும் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.

மசோதா விவா­தத்­தில் பேசிய முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா­லின், இணை­யச் சூதாட்­டத்­தைத் தடுப்­பது குறித்து அறி­வுரை வழங்க ஓய்­வு­பெற்ற நீதி­பதி சந்­துரு தலை­மை­யில் குழு அமைத்­த­தாகவும் மாண­வர்­க­ளின் படைப்­பாற்­றல் பாதிக்­கப்­ப­டு­வ­தாக அந்­தக் குழு தெரிவித்ததாகவும் கூறினார்.

"ஆகை­யால் இணை­யச் சூதாட்டத் தடை மசோ­தாவை ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­ற­வேண்­டும்," என்றார் முத­ல­மைச்­சர்.

சட்ட மசோதா மீண்­டும் ஏக­ ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.