சென்னை, கோயம்புத்தூர், ஓசூரில் தொழில்நுட்ப நகர் திட்டம்

சென்னை, கோயம்புத்தூர், ஓசூரில் தொழில்நுட்ப நகர் திட்டம்

1 mins read

சென்னை: ஆசி­யா­வி­லேயே ஆகப் பெரிய தொழில்­நுட்ப மைய­மாக தமிழ்­நாட்டை ஆக்­கு­வதே தம்­மு­டைய இலக்கு என்­றும் அதை நோக்கி தான் பாடு­ப­டப்­போ­வ­தா­க­வும் தமி­ழக முதல்­வர் நேற்று தெரி­வித்­தார்.

இந்த இலக்­கை­யொட்டி தமிழ்­நாட்­டில் சென்னை, கோயம்­புத்­தூர், ஓசூர் நகர் பகு­தி­களில் தொழில்­நுட்ப நக­ரங்­கள் அரசு சார்­பில் தொடங்­கப்­படும் என்று அவர் அறி­வித்­தார்.

சென்­னை­யில் தொழில்­நுட்­பம், தொழில்­மு­னை­வோர், திறன் மேம்­பாட்டு உச்­ச­நிலை 2023 மாநாட்டை (யுமேஜின்) காணொளி வாயி­லாக தொடங்கி வைத்து அவர் உரை­யாற்­றி­னார்.

தொழில்­நுட்­பத்­தில் உலக நாடு­கள் அடை­யும் முன்­னேற்­றத்தை அதே காலத்­தில் தமி­ழ­கமும் அடைய வேண்­டும் என்­பது­தான் தன்­னு­டைய கனவு என்று தெரி­வித்த திரு ஸ்டா­லின், 1996ல் அப்­போ­தைய திமுக ஆட்­சி­யில் ஆசி­யா­வி­லேயே மிகப் பெரிய டைடல் பார்க் தொழிற்­பேட்டை அமைக்­கப்­பட்­ட­தைச் சுட்­டி­னார்.

பிறகு கோயம்­புத்­தூ­ரி­லும் அடுத்­த­டுத்து பல்­வேறு நக­ரங்­களி­லும் தொழில் பேட்டை உரு­வா­ன­தாக அவர் கூறி­னார்.

இவற்­றின் தொடர்ச்­சி­யாக சென்னை, கோயம்­புத்­தூர், ஓசூர் பகு­தி­களில் தமிழ்­நாடு தொழில்­நுட்ப நகர்­கள் தொடங்­கப்­படும் என்­றாரவர். அந்த மூன்று நாள் மாநாட்­டில் 12,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் கலந்­து­கொள்­கி­றார்­கள்.